UAE Tamil Web

புஜைராவில் இலவச டிரைவ்-த்ரூ கொரோனா பரிசோதனை..!

புஜைரா மருத்துவ சுகாதார துறை மற்றும் தடுப்பு அமைச்சகத்துடன் இணைந்து புஜைரா காவல்துறையால் இலவச டிரைவ்-த்ரூ கொரோனா பரிசோதனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இதில் மேஜர் ஜெனரல் முகமது அஹ்மத் பின் கானம் அல் காபி, புஜைரா காவல்துறையின் தலைமை அதிகாரி, புஜைராவின் அவசரநிலை, நெருக்கடிகள் மற்றும் பேரிடர் குழுவின் தலைவர் மற்றும் புஜைரா மருத்துவ மாவட்ட இயக்குனர் டாக்டர் முகமது அப்துல்லா சயீத் ஆகியோர் பரிசோதனை மையத்தை திறந்து வைத்தனர்.

இது குறித்து மேஜர் ஜெனரல் அல் காபி கூறுகையில், “சமூக முயற்சிகளுக்கு புஜைரா காவல்துறை அதிக ஆர்வம் காட்டிவருகிறது. இலவசமாக (டிரைவ்-த்ரூ) வாகனத்தின் இருந்துக் கொண்டே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளாப்படடும். இதன் மூலம் நேரத்தை மிச்சப்படுத்துவதுடன் மற்ற மையங்களின் பரிசோதனைக்கான கூட்ட நெரிசலை குறைக்கும் நடவடிக்கையாக இது அமையும்” என்று ஜெனரல் அல் காபி தெரிவித்தார்.

புஜைரா காவல்துறையின் செயல்பாட்டுத் துறையின் இயக்குநர் பிரிகேடியர் அப்துல் ரஹ்மான் முகமது அல் தன்ஹானி கூறுகையில், “புஜைரா காவல்துறை தலைமையகத்திற்கு அடுத்ததாக அமைந்துள்ள கொரோனா பரிசோதனை மையம் தினமும் பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். பரிசோதனனை பெற விரும்புவோர் தங்களது அமீரக அடையாள அட்டையை காட்டி பரிசோதித்துக் கொள்ளலாம்” என்றார்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap