பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இலவச குடிநீர் குளிர்விப்பான்கள் நிறுவப்பட்டது.!

Image Credit: Khaleej Times

மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவது இஸ்லாத்தில் ஒரு சிறந்த தர்மமாகும். இதனை, DABS அறக்கட்டளை பெரிய அளவில் செயல்படுத்த தொடங்கி உள்ளது.

DABS அறக்கட்டளை துபையில் பல இடங்களில் மின்சார குடிநீர் குளிர்விப்பான்கள்(Electric Water Coolers) நிறுவி இலவசமாக குளிர் குடிநீர் மக்களுக்கு வழங்கி வருகிறது. குறிப்பாக கட்டுமான தொழிலாளர்கள், தொழில்துறை தொழிலாளர்கள், அனைத்து நீல காலர் தொழிலாளர்கள் மற்றும் சமூகத்தில் மிகவும் பின்தங்கியவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை(10.01.2019) அதிகாரிகள் சுமார் 10 இடங்களில் இலவச மின்சார குடிநீர் குளிர்விப்பான்கள் நிறுவினார்கள். இதில் அல் கர்ஹவுட்(Al Garhoud) பகுதியில் இரண்டும், அல் குவ்ஸ் (Al Quoz) தொழிலார்கள் விடுதியில் இரண்டும், துபாய் அல் குசைஸ்(Al Qusais) பிலிப்பைன்ஸ் வெளிநாட்டு தொழிலாளர் அலுவலகத்தில் ஒன்றும், சபீல் பார்க்(Zabeel Park) பகுதியில் ஒன்றும் மற்றும் பர் துபாய்(Bur Dubai) மசூதியில் இரண்டும் நிறுவப்பட்டது.

இது தொடர்பாக, சமூகத் துரையின் துணை இயக்குனர் Dr. ஹிஷாம் அல் சஹ்ரானி கூறுகையில்; மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவது எங்களுக்கு மிகவும் முக்கியமான திட்டங்களில் ஒன்றாகும். இந்த முயற்சி தொண்டு நிறுவமான சயீத் ஹேப்பினெஸ் கேரவன்(Zayed Happiness Caravan) ஒரு பகுதியாகும். இது தொழிலாளர்களுக்கு இலவச உணவு மற்றும் நல்ல பைகள் விநியோகிப்பதன் மூலம் தொழிலார்கள் மத்தியில் மகிழ்ச்சியை பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கோடை காலத்தில் குளிர் குடிநீர் கிடைக்காத பல இடங்களை நாங்கள் தேர்ந்தெடுத்தோம். இதற்காக, நாங்கள் தனிப்பட்ட முறையில் பல பகுதிகளை ஆய்வு செய்தோம். மேலும், குளிர்சாதனப் பெட்டிகள் தேவைப்படும் இடங்களை கண்டறிவதற்காக நகரத்தில் உள்ள அதிகமான மக்களிடம் பேசினோம்.

உதாரணமாக, “அல் கர்ஹவுட்(Al Garhoud)” உள்ள ஒரு பகுதியில் நான்கு டாப்ஸ் எடையுள்ள இரண்டு தண்ணீர் குளிர்விப்பான்களை நாங்கள் நிறுவினோம். இது பல தொழிலாளர்கள், தோட்டக்காரர்கள் கடும் வெயிலில் வேலை செய்துவிட்டு ஓய்வு பெரும் இடமாகும்.

இதற்கு முன் இங்கு தண்ணீர் வசதி இல்லாததால், இங்கு வசிக்கும் பலர் அருகில் உள்ள பள்ளிக்கூடத்தில் தண்ணீர் கேட்டு வந்திருக்கிறார்கள் என்று ஜூஹி யாஸ்மீன் கான், CSR and DABS தொண்டு நிபுணர் கூறினார்.

Source: Khaleej Times

Loading...