UAE Tamil Web

ஷார்ஜாவில் உள்ள அருங்காட்சியங்களை இந்த ஒருநாள் டிக்கெட் எடுக்காமல் சுற்றிப்பார்க்கலாம்..! – நல்ல சான்ஸ்..மிஸ் பண்ணிடாதிங்க..!

shj-museum-

சர்வதேச அருங்காட்சிய தினம் மே 18 ஆம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஷார்ஜா முழுவதிலும் உள்ள அருங்காட்சியங்களை அன்றைய தினம் மக்கள் நுழைவுக் கட்டணமில்லாமல் பார்வையிடலாம் என ஷார்ஜா அருங்காட்சியக ஆணையம் (SMA) தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் கொரோனா சூழ்நிலையில் ஷார்ஜா அருங்காட்சியகத் துறையின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றிய கலந்துரையாடல் ஒன்றும் நடக்கவிருக்கிறது.

The Future of Museums Recover and Reimagine (Real and Virtual Challenges) என்ற தலைப்பில் நிகழ இருக்கும் இந்த உரையாடலில் ஷார்ஜா அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம், ஷார்ஜா காவல்துறை, ஷார்ஜா வணிகம் மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாட்டு ஆணையம் (SCTDA), ஷார்ஜா கலை அருங்காட்சியகத்தின் சார்பில் SMA ஆகியவை பங்கேற்க இருக்கின்றன.

The-Future-of-Museums
Image Credit: Gulf News

பெருந்தொற்றுக் காலத்தில் பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பான வழிமுறைகள் குறித்து ஷார்ஜா அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் ஷார்ஜா வணிகம் மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாட்டு ஆணையம் பேச இருக்கின்றன.

ஷார்ஜாவின் உலகளாவிய சுற்றுலாத்துறை மேம்பாடு குறித்து SCTDA உரை நிகழ்த்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரபிக்கில் நிகழ்ச்சிகள் நடந்தாலும் உடனுக்குடன் ஆங்கிலத்தில் அவை மொழிபெயர்க்கப்படும்.

யூனிவெர்சிட்டி ஆஃப் ஷார்ஜாவின் மாணவர்கள், ஷார்ஜா முழுவதிலும் உள்ள கலாசார/சுற்றுலாத்துறை நிறுவனங்கள் பங்கேற்கவேண்டும் என்பதற்காகவே இந்நிகழ்வு காணொளி வாயிலாக நடத்தப்படுகிறது.

இந்த கலந்துரையாடலில் பங்கேற்க விரும்புபவர்கள் SMA வின் இணையதளத்தில் சென்று பதிவுசெய்யலாம்.