UAE Tamil Web

அபுதாபி: அய்மான் சங்கத்தால் தமிழர்களுக்காக நடத்தப்பட்ட இலவச மருத்துவ முகாம்..!

aiman sangam

அபுதாபி: அமீரக வாழ் தமிழர்களுக்காக அய்மான் சங்கம் இலவச மருத்துவ முகாம் ஒன்றனை நடத்த இருப்பதாக சென்ற வாரம் அறிவித்திருந்தது. அபுதாபி எலக்ட்ரா ரோட்டில் அமைந்துள்ள LLH ஹாஸ்பிட்டலின் மெசைனைன் தளத்தில் (mezzanine floor) இல் இந்த முகாம் நேற்று (4/06/2021) சிறப்பாக நடந்துமுடிந்தது.

இந்த நிகழ்வின்போது Privilege Fast Service card வழங்கும் திட்டமும் துவங்கப்பட்டது. இத்திட்டத்தின் முதற்கட்டமாக அய்மான் சங்கத்தில் பதிவு செய்த நபர்களுக்கு மட்டும் நேற்று கார்டு வழங்கப்பட்டிருக்கிறது.

aiman sangam 2

காலை 9 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடைபெற்ற இந்த இலவச முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு கீழ்க்கண்ட பரிசோதனைகள் / சேவைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டன.

  • இரத்தத்தில் உள்ள சர்க்கரை
  • கொழுப்பு
  • இரத்த அழுத்தம்
  • ஹீமோகுளோபின்
  • யூரிக் ஆசிட்
  • BMI
  • மருத்துவ ஆலோசனைகள்

இந்த முகாமை அய்மான் தலைவர் கீழக்கரை ஹெச்.எம்.முஹம்மது ஜமாலுத்தீன் மற்றும் அய்மான் பைத்துமால் தலைவர் அதிரை ஏ.ஷாஹுல் ஹமீது ஹாஜியார் ஆகியோர் துவங்கி வைத்தனர்.

இந்த நிகழ்வின்போது கௌரவ ஆலோசகர் ஆவை A. S. முஹம்மது அன்சாரி, பைத்துல் மால் செயலாளர் பார்த்திபனூர் நிஜாம் மைதீன், துணைப் பொருளாளர்
பசுபதிகோவில் சாதிக் பாட்ஷா, நிர்வாகச் செயலாளர் ஆடுதுறை முஹம்மது அப்துல் காதர், மக்கள் தொடர்புச் செயலாளர் தேவிப்பட்டிணம் ஹாஜா முபீனுத்தீன், நிர்வாக செயற்குழு உறுப்பினர் கீழக்கரை ஏ.ஹெச்.சயீத் முஹம்மது பாசில் மற்றும் விழாக் குழு செயலாளர் காயல் ஏ.ஆர்.ரிபாயி சுல்தான் ஆகியோரும் உடனிருந்தனர்.