UAE Tamil Web

துபாய், ஷார்ஜவை தொடர்ந்து அஜ்மானிலும் இலகச பார்கிங் வசதி அறிமுகம்

ரமலான் மாதம் 28 நாட்களை கடந்துவிட்ட நிலையில் அமீரகத்தில் பணிபுரியும் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு ஊ ஈத் அல் ஃபித்ர் (நோன்பு பெருநாள்) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஊழியர்களுக்கு ஏப்ரல் 30, சனிக்கிழமை முதல் மே 6 வெள்ளி வரை விடுமுறை நாட்கள் இருக்கும். பின்னர் மே 7 மற்றும் 8 ஆம் தேதி சனி, ஞாயிறு வார விடுமுறை இருக்குமேயானால் அரசு ஊழியர்களுக்கு 9 நாட்கள் ஈத் அல் பித்ர் விடுமுறையாகும்.

இந்த ஈத் அல் பித்ர் விடுமுறை நாட்களில் அஜ்மான் வாகன ஓட்டிகளுக்கு ஏழு நாட்கள் இலவச பார்க்கிங் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது ஏப்ரல் 30 முதல் மே 6  வரை பார்க்கிங் கட்டணம் இலவசம் என்றும் மே 7 முதல் பார்க்கிங் கட்டணம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அஜ்மான் முனிசிபாலிட்டி தெரிவித்துள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap