36.9 C
Dubai
May 25, 2020
UAE Tamil Web

ஈத் அல் பித்ர் பண்டிகையை முன்னிட்டு அபுதாபியில் இலவச பார்க்கிங் வசதி அறிவிப்பு!

parking abudhabi

ஈத் அல் பித்ர் விடுமுறை நாட்கள் முழுவதும் அபுதாபி வாகன ஓட்டுனர்கள் இலவசமாக தங்களது வாகனங்களை பார்க்கிங் செய்துகொள்ளலாம் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

நகராட்சியின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (Integrated Transport Centre) மற்றும் அபுதாபி போக்குவரத்துத்துறை ஆகியவை வியாழக்கிழமை (இன்று) வெளியிட்டுள்ள செய்தியில், மறு அறிவிப்பு வரும் வரையில் இந்த இலவச பார்க்கிங் வசதி அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் அனைவரும் மவாகிஃப் விதிமுறைகளைப் (Mawaqif regulations) பின்பற்ற வேண்டும் எனவும், தடை செய்யப்பட்ட இடங்களிலோ அல்லது போக்குரவரத்திற்கு இடையூறு செய்யும் வகையிலோ மக்கள் தங்களது வாகனங்களை நிறுத்தக்கூடாது எனவும் ITC தெரிவித்துள்ளது.

காலாவதியான குடியிருப்பாளர்களுக்கான பார்க்கிங் அனுமதி ( residential parking permits) கொண்டவர்கள் அதனைப் புதுப்பித்துக்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

சரியான முறையில் பார்க்கிங் விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா? என்பதனை அறிய  பல்வேறு இடங்களில் மவாகிஃப் ஆய்வாளர்கள் மேற்கொள்ளும் ஆய்வுப் பணிகள் தொடரும் என ITC  தெரிவித்துள்ளது.

parking
Image Credits- Khaleej Times | picture used for illustrative purposes only

“பாதுகாப்பு மற்றும் முன்னெச்செரிக்கை நடவடிக்கையின் அடிப்படையில் வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்கள் மூடப்பட்டுள்ளதால் பயனாளர்கள் அம்மையங்களின் இணையதளம் மூலமாகவோ, ஸ்மார்ட் ஆப் மூலமாகவோ தங்களுக்குத் தேவையான சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம்” என ITC அளித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இணைய தளம் (www.itc.gov.ae), மின்னஞ்சல் முகவரி ([email protected]), தகவல் அழைப்பு மையம் (80088888) மற்றும் டார்ப் (Darb) ஸ்மார்ட் ஆப் வாயிலாக ஆன்லைன் பரிவர்த்தனை மேற்கொள்ளும் தொலைவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு தங்களது சேவைகளை வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்கள் வழங்கிவருகின்றன.

மற்ற சில பதிவுகள்