39.2 C
Dubai
September 22, 2020
UAE Tamil Web

ஈத் அல் அத்ஹா : இலவச பார்க்கிங் திட்டத்தினை அறிவித்தது அபுதாபி அரசு..!

free-parking,-uae,-eid-al-adha

அபுதாபியின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் ஈத் அல் அத்ஹா பண்டிகையை முன்னிட்டு இலவச பார்க்கிங் திட்டத்தினை அறிவித்திருக்கிறது.

ஜூலை 30 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 3 ஆம் தேதி காலை 7.59 மணி வரையிலும் மக்கள் இலவசமாக தங்களது வாகனங்களை பொது பார்க்கிங் இடங்களில் நிறுத்திக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை பார்க்கிங் செய்யும் போது சாலை விதிமுறைகளை கடைபிடிக்கவேண்டும் எனவும் போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை யாரும் பார்க்கிங் செய்யக்கூடாது எனவும் போக்குவரத்து மையம் அறிவுறுத்தியுள்ளது.

இரவு 9 மணி முதல் காலை 8 மணி வரையிலான நேரங்களில் குடியிருப்பாளர்கள் தங்களது வாகனங்களை நிறுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்ட தனியார் பார்க்கிங் இடங்களில் மக்கள் தங்களது வாகனங்களை நிறுத்துதல் கூடாது எனவும் தடை செய்யப்பட்ட இடங்களில் வாகனங்களை பார்க்கிங் செய்வோருக்கு மவாகிஃப் ஆய்வாளர்கள் அபராதங்களை விதிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!