புனித ரமலான் மாதத்தில் தராவீஹ் தொழுகைக்காக மசூதிகளின் அருகில் இலவச வாகன பார்கிங் வசதியை ஷார்ஜா அறிவித்துள்ளது.
ஷார்ஜா முனிசிபாலிட்டியின் டைரக்டர் ஒபைத் சயீத் அல் துனைஜி கூறுகையில், பொது வாகன நிறுத்தத்தில் காலை 8 மணி முதல் நள்ளிரவு வரை கட்டணம் செலுத்த வேண்டும்.
தராவீஹ் தொழுகை நேரங்களில் மசூதி அருகில் இருக்கும் வாகன நிறுத்துமிடத்தில் இலவசமாக வாகனங்களை நிறுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழிபாட்டாளர்களுக்கு மன அமைதியை வழங்க, ஆய்வாளர்கள் கார்களை சரியான முறையில் நிறுத்துவதை உறுதி செய்வார்கள் மற்றும் இருமுறை வாகனத்தை நிறுத்துதல் அல்லது பிற கார்களைத் தடுப்பது போன்ற மீறல்கள் முற்றிலும் தடுக்கப்பட வேண்டியவை.
இந்த நடைமுறைகளை மீறினாலோ, எதிர்மறையாக செயல்பட்டாலோ ஷார்ஜா முனிசிபாலிட்டிக்கு புகாரளிக்குமாறு கூறப்பட்டுள்ளது.