அபுதாபி முஸாஃபா 32 பகுதியில் இலவச PCR பரிசோதனை மையம் இயங்கிவருகிறது. பரிசோதனை எடுக்க விரும்புபவர்கள் இம்மையத்திற்கு தங்களது எமிரேட்ஸ் ஐடியுடன் வரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நமது இணையதள பணியாளர்கள் இன்று இந்த மையத்திற்குச் சென்று PCR பரிசோதனை எடுத்துக்கொண்டனர்.

ஒரே நேரத்தில் பலருக்கும் பரிசோதனை எடுக்கும் விதத்தில் இந்த முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் உங்களது பரிசோதனையை முடிக்கலாம். வரிசையில் நிற்க வேண்டிய அவசியமும் இல்லாததால் நம் இணையதள பணியாளர்களும் 3 நிமிடங்களில் தங்களுடைய பரிசோதனையை முடித்திருந்தனர்.

அனைத்து எமிரேட்களிலும் உள்ள நபர்களும் இங்கே இலவசமாக பரிசோதனை எடுத்துக்கொள்ளலாம். இருப்பினும் அபுதாபி, முஸாஃபாவில் வசிப்பவர்கள் எளிதில் இந்த மையத்தை அணுகலாம். ஆகவே வாய்ப்புள்ள, தேவையுள்ள நபர்கள் இங்கே சென்று இலவசமாக கொரோனா பரிசோதனையை மேற்கொள்ளுங்கள்.

முகாமின் முகவரி

முஸாபா 32/1,

செயின்ட் பால் கத்தோலிக் சர்ச்-கு எதிரே உள்ள இடத்தில் இந்த முகாம் அமைக்கப்பட்டுள்ளது. ( KM டிரேடிங்கிற்குப் பின்புறம்)

முகாம் அமைந்துள்ள இடம் கீழே மேப்-பில் கொடுக்கப்பட்டுள்ளது.

தினந்தோறும் காலை 10 மணிமுதல் இரவு 9.15 மணிவரையில் இலவச பரிசோதனை முகாம் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவைக் கட்டுப்படுத்தும் விதமாக அமீரக அரசு இதுபோன்று பல்வேறு இடங்களில் இலவச கொரோனா பரிசோதனை மையங்களை நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.