UAE Tamil Web

அபுதாபி பள்ளிக்கூடங்களில் கொரோனா பரிசோதனை மையம் – வேற லெவல் முயற்சி!

கொரோனா பரவலுக்கிடையே கோடை விடுமுறைக்குப் பிறகு அபுதாபியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பள்ளிக்கூடங்கள் செயல்படத் தொடங்கின. பள்ளி செல்லும் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை அபுதாபி கல்வியறிவுத்துறை வெளியிட்டிருந்தது. அந்த வகையில் 14 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை மேற்கொள்வது பள்ளி செல்லும் அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக அபுதாபி முழுவதும் மாணவர்கள் இலவசமாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனை மேலும் எளிதாக்கும் வகையில் தற்போது அபுதாபியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் வளாகத்திலேயே சுகாதார வல்லுநர்களை கொண்டு கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்பட இருக்கின்றன. செப்டம்பர் 7ம் தேதி முதல் பள்ளிகளிலேயே அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களின் வேலைப்பளு வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்

0 Shares
Share via
Copy link