UAE Tamil Web

அபுதாபி: மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை இலவசம்!

Corona Test

கோடை விடுமுறை முடிந்து அபுதாபியில் பள்ளிக்கூடங்கள் செயல்படத் தொடங்கியுள்ளதால் மாணவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பள்ளியில் நுழையும் முதல் நாளில் மாணவர்கள் நெகடிவ் சான்றிதழ் அளிப்பது கட்டாயம். இதேபோல 14 நாட்கள் இடைவெளியில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு அதற்கான சான்றிதழ்களையும் பள்ளியில் சமர்பிக்க வேண்டும். இதனை கருத்தில் கொண்டு அபுதாபியில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு கொரோனா பரிசோதனை மையங்களில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் மாணவர்கள் இலவசமாக பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. G42 ஹெல்த் கேர் மற்றும் சேஹா அமைப்புகளிலும் இந்த சலுகையை பயன்படுத்தி மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் இலவச கொரோனா பரிசோதனை செய்து கொள்ள அபுதாபி சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Corona Test
0 Shares
Share via
Copy link