UAE Tamil Web

இலவச பார்க்கிங் மற்றும் டோல்.. சிறிய மாற்றத்தை கொண்டுவரும் அபுதாபி அரசு – என்ன மாற்றம்? எப்போது அமலாகும்?

அபுதாபியில் இனி ஞாயிற்றுக்கிழமைகளில் பார்க்கிங் மற்றும் டோல் கட்டணம் இலவசம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 15 முதல், அபுதாபியில் வசிப்பவர்கள் வெள்ளிக்கிழமைகளுக்குப் பதிலாக ஞாயிற்றுக்கிழமைகளில் இலவச பார்க்கிங் மற்றும் டோல் சலுகைகளை பெற முடியும்.

இந்த நடவடிக்கையை அபுதாபியின் நகராட்சிகள் மற்றும் போக்குவரத்து துறை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த முடிவு பீக் ஹவர்ஸின் போக்குவரத்தை மேம்படுத்தவும், அமீரகத்தில் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும் உதவும் என்று நம்பப்படுகிறது.

முன்னதாக, துபாய் புதிய நான்கரை (4.5 days) நாள் வேலை வாரத்துடன் ஞாயிற்றுக்கிழமைகளில் இலவச பார்க்கிங் அறிவித்தது. அதாவது, முன்பு இருந்ததைப் போல வெள்ளிக்கிழமைகளுக்குப் பதிலாக ஞாயிற்றுக்கிழமைகளில் பார்க்கிங் இலவசம் என்பது தான் இதன் பொருள்.

புதிய வார இறுதிக்கு ஏற்ப மிதக்கும் பாலத்தின் நேரங்களும் மாற்றப்பட்டுள்ளன. இருப்பினும், ஷார்ஜாவில், பார்க்கிங் என்பது சனி முதல் வியாழன் வரை கட்டணச் சேவையாகும் என்பதில் மாற்றமில்லை. மேலும் நீல நிறத் தகவல் அடையாளங்களைக் கொண்ட மண்டலங்களைத் தவிர அனைத்து மண்டலங்களிலும் வெள்ளிக்கிழமைகளில் இலவசமாக இருக்கும்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap