ராகுல் காந்தி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்காக இலவச வாகன வசதி.!

வருகின்ற 11.01.2019 & 12.01.2019 தேதி துபாய் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பொது நிகழ்ச்சி ஒன்று நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்திய நேஷனல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ‘ராகுல் காந்தி’ கலந்துகொண்டு உரையாற்ற இருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் சுமார் 25,000 முதல் 40,000 நபர்கள் பங்குபெறும் அளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. “காந்தியின் 150 ஆண்டுகள், இந்தியாவின் யோசனை” என்கிற தலைப்பில் நடைபெற இருக்கும் இந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியிலும் உரையாற்றுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியானது வருகின்ற 11.01.2019 மாலை 4.30 மணிக்கு துவங்கும். இந்த நிகழ்ச்சியில் யார் வேண்டுமானாலும் பங்குபெறலாம், இலவச நுழைவு தான். மேலும், இந்த நிகழ்ச்சியில் பங்குபெறுவோருக்கு உணவு, தண்ணீர், குளிர்பானங்கள் முதலியன அனைத்தும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்காக இலவச வாகன வசதியும் செய்யப்பட்டுள்ளது.

தொடர்பு எண்கள்:

  • ஹமீது ரஹ்மான்: 0552000686 (துபையில் உள்ளவர்கள் தொடர்புக்கு)
  • அப்துல் ரஹ்மான்: 0502821852 (அபூ தாபியில் உள்ளவர்கள் தொடர்புக்கு)

மேலும், வெளிநாட்டு இந்திய கலாச்சார சங்கத்தின் (Incas) தலைவரான ‘மஹாதேவன் வலசெர்ரி’, இந்திய நேஷனல் காங்கிரஸ் உடன் இணைந்த ஒரு அமைப்பு கூறுகையில்; ராகுல் காந்தி கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தரும் மக்களை அழைத்து செல்வதற்காக 1000 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த நிகழ்ச்சிக்கு வர வாகன தேவை உடையவர்கள் “www.rginuae.com” இணையதளத்திற்கு சென்று பதிவு செய்தால் போதும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பல மாநில இந்தியர்கள் திரளாக பங்குபெற வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பலர் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.