UAE Tamil Web

எச்சரிக்கை: மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் மணற்காற்று வீசும் – எச்சரிக்கும் வானிலை ஆய்வுமையம்..!

Closure-Dust-IMG-jpg

இன்று தூசு மற்றும் மணல் கலந்த கடுங்காற்று வீசும் எனவும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும் தேசிய வானிலை ஆய்வுமையம் (NCM) எச்சரித்துள்ளது.

தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,” மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் தூசி மற்றும் மணற்காற்று வீசும். இதனால் 3000 மீட்டருக்கு அப்பால் உள்ளவை தெரிவதில் சிரமம் ஏற்படலாம். வெள்ளிக்கிழமை இரவு 7 மணிவரையில் நாட்டின் உட்பகுதிகளில் இந்த நிலை ஏற்படலாம்” என NCM குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து வாகனவோட்டிகள் கவனமாக வாகனங்களை இயக்கும்படியும், விடுமுறை நாள் என்பதால் வெளியே செல்பவர்கள் முன்னெச்சரிக்கையாக செயல்படவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Closure-Dust-IMG-jpg
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap