UAE Tamil Web

அமீரகத்தில் நாளை முதல் துவங்கும் ஜும்ஆ தொழுகை.! மசூதி செல்வோர் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை பட்டியல் இதோ..

prayer

கோவிட்-19 தொற்று நோய் காரணமாக அமீரகத்தில் பல மாதங்களாக ஜும்ஆ தொழுகை தற்காலிக ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், நாடு முழுவதும் டிசம்பர் 4 (நாளை) முதல் ஜும்ஆ தொழுகைக்காக மசூதிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன.

- Advertisment -

இது தொடர்பான அறிவிப்பை கடந்த மாதம் 24-ம் தேதி தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரழிவுகள் மேலாண்மை ஆணையம்(NCEMA) வெளியிட்டிருந்தது. அமீரகத்தில் உள்ள மசூதிகள் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகையை 30 % திறனுடன் மீண்டும் தொடங்கவுள்ளன.

நாட்டில் கொரோனாவிற்கு எதிரான போர் இன்னும் தொடரும் நிலையில், நாளை முதல் துவங்க உள்ள வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்காக மசூதி செல்வோர் செய்ய வேண்டியவை மற்றும் செய்ய கூடாதவை பற்றிய NCEMA-வின் வழிகாட்டுதல்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

செய்ய வேண்டியவை..

  • வழிபாட்டாளர்கள் எல்லா நேரங்களிலும் முகக்கவசம் அணிய வேண்டும்.
  • மேற்பரப்புகளை தொடுவதை தவிர்க்க வேண்டும்.
  • கைகளை கழுவி சுத்தமாக வைத்து கொள்ளுங்கள்.
  • தொழுகைக்காக மசூதி வருவோர் தங்கள் சொந்த முஸல்லாவை(விரிப்பு) கொண்டு வர வேண்டும்.
  • மசூதிகள் 30% திறனில் செயல்பட உள்ள நிலையில், சிறப்பு தொழுகைக்காக அங்கு செல்வோர், கட்டாயம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
  • ஜும்ஆ தொழுகைக்கு வருவோர் தங்களது சொந்த புனித குர்ஆன் நகல்களை கொண்டு வர வேண்டும். தொலைபேசிகள் அல்லது டேப்களில் வைத்திருக்கும் குர்ஆன் நகல்களை படித்து கொள்ளலாம்.

செய்ய கூடாதவை..

  • குத்பாவிற்கு(பிரசங்கத்திற்கு) 30 நிமிடங்களுக்கு முன் மசூதிகள் திறக்கப்படும், தொழுகைக்கு 30 நிமிடங்கள் கழித்து மூடப்படும். எனவே தொழுகைக்கு முன்னும், பின்னும் மசூதிகளுக்கு வெளியே வழிபாட்டாளர்கள் கூட்டமாக கூட கூடாது.
  • ஒருவருக்கு ஒருவர் கை குலுக்கி கொள்வதோ, கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்து கொள்வதோ கூடாது.
  • வழிபட்டாளர்கள் தங்களது தனிப்பட்ட உடைமைகளை பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
  • கண், காது, வாயை தொடுவதை தவிர்த்து கொள்ளுங்கள்.
  • உணவு மற்றும் பிற நன்கொடைகளை வழங்குவதை தவிர்க்கவும்.
  • முதியவர்கள், குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ளவர்கள் மசூதிக்கு செல்ல கூடாது.