UAE Tamil Web

வார விடுமுறை மாற்றம்: அமீரகம் முழுவதும் இனி ஜும்ஆ தொழுகை நேரம் இதுதான்..!

அமீரகத்தில் பெடரல் அரசு ஊழியர்களுக்கு இனி வெள்ளி, சனிக்கிழமைக்குப் பதிலாக வெள்ளி மதியம் துவங்கி சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை வரை வார விடுமுறை விடப்படும் என அமீரக அரசு இன்று அறிவித்திருக்கிறது.

ஜனவரி 1, 2022 ஆம் தேதி முதல் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை முதல் வெள்ளிகிழமை மதியம் வரை மட்டுமே வேலை நாட்களாக இருக்கும்.

இதனை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை (ஜும்ஆ) தொழுகை மற்றும் பிரசங்கங்கள் வெள்ளிக்கிழமை மதியம் 1.15 மணிக்குப் பிறகு அமீரகம் முழுவதும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கத்திய நாடுகளுடனான ஒருங்கிணைந்த வளர்ச்சி, உலகளாவிய பங்குச் சந்தையில் கூடுதல் கவனம் செலுத்துதல் ஆகியவை காரணமாக வார விடுமுறை அமீரகத்தில் மாற்றப்பட்டிருக்கிறது. இது சமூக மற்றும் குடும்பங்களுக்கிடையில் வலுவான பிணைப்பை ஏற்படுத்தும் எனவும் அமீரக அரசு மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

30 Shares
Share via
Copy link