UAE Tamil Web

அமீரகத்தில் இருக்கும் Foodieஆ நீங்க… வெரைட்டியான டிஸ்களை டேஸ்ட் பண்ண ஆசையா இருக்கா? அப்போ இந்த viral லிஸ்ட்டில் இருப்பதை உடனே ட்ரை செய்யுங்க செம yummy

சாப்பாடுனு சொன்னா யாருக்கு தாங்க பிடிக்காது. விதவிதமா சாப்பிட எப்போதுமே விரும்புவது அனைவருக்குமே இயல்பு தான். அந்த ஆசைக்காக தினமும் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்துபவராக இருந்தால் இந்த பதிவினை தொடர்ந்து படித்து ஒரு ட்ரிப்ப போட்டு டேஸ்ட் பண்ணிடுங்க.

மேகி சாண்ட்விச்:

‘இந்தியன் ட்விஸ்ட்’ உடன் ஸ்லைடர்களை வழங்குவதில் பெயர் பெற்ற வினோதமான உணவகமான O’Pao, மக்கள் முயற்சிப்பதற்காக அவர்களின் மெனுவில் ஒரு அசாதாரண டிஷை அறிமுகப்படுத்தி இருக்கிறது. ’மேகி சாண்ட்விச்’. இந்த டிஷ் என்பது ஸ்கெஸ்வான் ஸ்டைல் மேகியைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சீஸி பர்கர். பர்கர் பன்னிற்கு பதில் பாவ் பன் பயன்படுத்தி செய்கின்றனர்.

ரப்தி பராத்தா:

பராத்தாவிற்குள் கன்டென்ஸ்டு மில்க்கை வைத்தால் எப்படி இருக்கும் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஸ்தான் துபாய் உணவகம் ஆர்வமுள்ள மக்களுக்கு அதன் ‘ரப்தி பராத்தா’ மூலம் அந்த வாய்ப்பை வழங்குகிறது. தெற்காசியாவை பூர்வீகமாகக் கொண்ட பிளாட்பிரெட் வகை பராத்தா மற்றும் பாலில் செய்யப்பட்ட ரப்தியுடன் பாதாம், பிஸ்தா மற்றும் துண்டுகளாக்கப்பட்ட பச்சை திராட்சைகளுடன் பரிமாறப்படுகிறது. கேட்கவே செமையா இருக்கே!

Charcoal hummus:

ஜுமைரா கடற்கரை சாலையில் மறைந்திருக்கும் தாவர அடிப்படையிலான, gluten-free கஃபே Life’n one. இங்கு உங்களால் மத்திய கிழக்கு உணவில் சிறப்பான ஒரு அனுபவத்தினை பெற முடியும். இந்த சைவ உணவகத்தில் தரப்படும் ‘பிளாக் ஹம்முஸ்’ என்பது பாரம்பரிய Charcoal hummus செம டேஸ்ட் என்கிறார்கள் ட்ரிப் அடித்தவர்கள். கொண்டைக்கடலை, பூண்டு, எலுமிச்சை மற்றும் எள் தஹினி ஆகியவற்றின் கலவையைக் கொண்டு, நச்சு நீக்கும் செய்யப்பட்ட charcoal கலக்கப்பட்டுள்ளது.

Tapioca croquettes:

சாட் பஜார் துபாயில் சாகச உணவு உண்பவர்களுக்கு வழங்கப்படும் மற்றொரு ஆர்வமுள்ள படைப்பு தான். மரவள்ளிக்கிழங்கிலிருந்து செய்யப்பட்ட சீஸ் குரோக்கெட்டுகள். இந்தியாவில் சபுதானா அல்லது ஜவ்வரிசி என்றும் அழைக்கப்படும், மாவுகளில் இருந்து இந்த குரோக்கெட்டுகள் தயாரிக்கப்படுகிறது.
இருப்பினும், சபுதானாவில் இருந்து குரோக்கெட்டுகளை தயாரிப்பது அவ்வளவு பொதுவானதல்ல தானே.

Doughnut burgers:

ஸ்வீட்டா அல்லது காரமா யோசிக்க முடியவில்லையா? பயப்படவே வேணாம். பிரபலமான பர்கர் பிளேஸ் Pickl இரண்டு சுவையிலும் சிறந்ததை இணைத்து ஒரு வித்தியாச டிஷை கண்டு பிடித்துள்ளது. glazed டோனட்டின் உட்புறத்தில் மாட்டிறைச்சி அல்லது பன்றி இறைச்சி மற்றும் சாஸுடன் தயாராகிறது இந்த டோனட் பர்கர். கேட்கவே வித்தியாசமா இருக்கே!

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap