UAE Tamil Web

நேற்று வரை டிரைவர்; இன்று கோடீஸ்வரன் – மஹ்சூஸ் டிராவில் 5 கோடி திர்ஹம்சை வென்ற டிரைவர்..!

mahzooz

இப்படியெல்லாம் நடக்குமா? என சில சமயங்களில் நமக்குத் தோன்றுவதுண்டு. அப்படித்தான் நடந்திருக்கிறது ஜுனைத் ராணாவின் வாழ்விலும். அமீரகத்தில் டிரைவராகப் பணிபுரிந்துவரும் ராணாவிற்கு கடந்த மஹ்சூஸ் டிராவில் 50 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசுத்தொகை கிடைத்திருக்கிறது.

பாகிஸ்தானைச் சேர்ந்த ராணாவிற்கு 4 வயதில் ஒரு மகளும் 2 வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர். தற்போது கர்ப்பமாக இருக்கும் ராணாவின் மனைவி தனது குழந்தைகளுடன் பாகிஸ்தானில் வசித்துவருகிறார்.

குலுக்கல் அன்று, ராணா தனது வீட்டிற்கு போன் செய்ய, அவரது தங்கை போனை எடுத்திருக்கிறார். தனது மனைவி பற்றிக் கேட்க, அவர் தொழுகையில் இருப்பதாக ராணாவின் தங்கை கூறியிருக்கிறார். அப்போது, குலுக்கலில் எனக்கு பரிசு கிடைக்கவேண்டும் எனப் பிரார்த்திக்குமாறு மனைவியிடம் சொல்லும்படி தங்கையைப் பணித்திருக்கிறார் ராணா. அதிர்ஷ்டவசமாக அந்த குலுக்கலில் அவருக்கு 50 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசு கிடைத்திருக்கிறது.

இதனால் தனக்கு மகள் பிறந்தால் துஆ எனப் பெயர்வைக்க இருப்பதாக அவர் தெரிவித்தார். வெற்றியடைந்த பணத்தினைக்கொண்டு தன்னுடைய 1 லட்சம் திர்ஹம்ஸ் கடனை அடைப்பதோடு, தனது அண்ணன் வாங்கியிருக்கும் கடனையும் முதலில் அடைப்பேன் என்கிறார் ராணா.

துபாய் மற்றும் பாக்கிஸ்தானில் வீடு கட்ட இருப்பதாகத் தெரிவிக்கும் ராணா, விரைவில் தனது குடும்பத்தை அமீரகம் அழைத்துவர இருப்பதாகவும் தன்னுடைய கஷ்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் முடிவிற்கு வந்துவிட்டதாய் உணர்கிறேன் எனவும் தெரிவித்தார்.

மஹ்சூஸ் டிராவில் எப்படி கலந்துகொள்வது என்பது குறித்துத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

mahzooz
8 Shares
Share via
Copy link