சமூக வலைதளங்களில் சமையல் குறித்து லட்சக்கணக்கான வீடியோக்கள் வலம் வந்தாலும் தனது பேச்சாற்றல் மூலம் உணவை ரசிக்கும் வகையில் லட்சக்கணக்கான பார்வையாளர்களை பெற்றிருப்பவர் வீணா ஜன்.
கேரள மாநிலத்தை சேர்ந்த இவர் தற்போது துபாயில் வசித்து வருகிறார். தான் சமைக்கும் வகை வகையான உணவுகளை வீடியோவாக யூடியூப் சேனலில் பதிவிட்டு வருகிறார். இவரது யூடியூப் சேனலை இதுவரை 20 லட்சத்து 32 ஆயிரம் பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.
கேரள உணவுகள் மட்டுமின்றி மத்திய கிழக்கு நாடுகளின் பிரபல உணவுகளையும் சொல்லிக் கொடுத்து பார்வையாளார்களையும் சமைக்க வைத்துருக்கிறார். சமையல் குறிப்பு சொல்லிக் கொடுக்கும் முறையால் இவர் பிரபலமாகிவிட்டார்.
இதுகுறித்து வீணா ஜன் கூறியதாவது, இதற்கு எனது குடும்பமே காரணம். கல்லூரி காலத்தில் இருந்தே சமையல் செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார். 42 வயதாகும் வீணாவுக்கு 2 குழந்தைகள் உள்ளது. இவர் மலையாள மொழியில் சமையல் கற்றுக் கொடுத்தாலும், அதற்கான விளக்கம் ஆங்கிலசப் டைட்டிலுடன் குறிப்பிடுகிறார். எனவே மலையாளம் தெரிந்தவர்களை மட்டுமின்றி பல நாடுகளை சேர்ந்த பார்வையாளர்களும் இவரது சமையல் வீடியோ கண்டு ரசிக்கின்றனர்.
“எனது சமையலுக்கு இந்த அளவுக்கு மக்கள் மதிப்பு கொடுக்கிறார்கள் என்பது மிகவும் மகிழ்ச்சி. சமூக வலைத்தள கணக்குகளில் பின்னூட்டங்கள் மூலமாகவும், மெயில் வழியாகவும் மக்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். என்னால் மற்றவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்பட்டிருப்பதை பார்க்கும்போது, இந்த பணியை வலிமையோடு செய்கிறேன். யூடியூப்பில் பெயர், புகழை சம்பாதிக்க வேண்டி இந்த சேனலை தொடங்கவில்லை.
இந்நிலையில் சமையல் சொல்லிக் கொடுத்து மகிழ்வித்து கொண்டிருக்கும் வீணாவுக்கு மறுபுறம் சோகங்கள் நிறைந்துள்ளன. முதல் கணவர் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததால், அவரை விவகாரத்து செய்துவிட்டு, ஜன் ஜோஷி என்பவருடன் வாழ்ந்து வருகிறார். வீணாவுக்கு 16 வயதில் அவ்னீத், 10 வயதில் ஆயுஷ் என்னும் இரு மகன்கள் உள்ளனர். துபாய் விமான நிலையத்தில் ஜோஷி பணியாற்றுகிறார். சமையல் கலையில் சாதிப்பதற்கு தன் கணவர்தான் முழு காரணன் என்கிறார் வீணா.
மேலும் வீணா கூறுககையுக், சிலரின் கீழ்த்தரமான பின்னூட்டங்களை எதிர்கொள்ளும்போது சவாலாக இருக்கும். சிலர் தங்கள் விருப்பப்படி செயல்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். நான் நானாக இருக்க வேண்டும் என்தில் உறுதியாக இருந்தேன். வெறுக்கத்தக்க கருத்துகளை புறக்கணித்ததால்தான் தனித்துவமான குரலை தக்கவைத்துக்கொள்ள முடிந்தது” என்கிறார்.
இவர் 10 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் பெற்றால் கிடைக்கும் கோல்டன் யூடியூப் பிளே பட்டன் விருதையும் பெற்றுள்ளார். 1 லட்சம் சப்ஸ்கிரைபர்களை தாண்டியபோது கிடைக்கும் வெள்ளிப் பதக்கமும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.