அமீரகத்தின் புஜைரா மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் விரிவாக்கப் பணிகளைத் தொடர்ந்து, இந்த 2022ம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 22,000க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்றதாக எமிரேட்ஸ் ஹெல்த் சர்வீசஸ் (EHS) இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த மருத்துவமனையின் விரிவாக்கப் பணிகள் கடந்த ஏப்ரல் 2021ல் நிறைவடைந்தன, இதன் விளைவாக மருத்துவமனைக்கு வந்த அனைத்து அவசரகால வழக்குகளிலும் 100 சதவிகிதத்தியும் மருத்துவர்களால் கையாளமுடிந்துள்ளது.
EHS வெளியிட்ட அறிக்கையில், புஜைரா மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் திறன் அதிகரித்தது, “சுகாதார வசதிகளை ஆதரிப்பதற்கும் பல்வேறு பிராந்தியங்களில் உள்ள நோயாளிகளுக்கு உயர்தர நோயறிதல் மற்றும் சிகிச்சை சேவைகளை வழங்குவதற்கும் அது மேற்கொண்ட உத்தியின் ஒரு பகுதி இதுவென்று” கூறியுள்ளது.
ஃபுஜைரா மருத்துவமனையின் இயக்குநர் அஹ்மத் அல்-காதிம் பேசும்போது, இந்தத் துறையை விரிவுபடுத்தவும், அதிக நோயாளிகளுக்கு இடமளிக்கவும், காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும் அதன் செயல்பாட்டுத் திறனை உயர்த்தவும் இந்த திட்டம் தொடங்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்தினார்.
ஃபுஜைரா மருத்துவமனையின் மருத்துவ விவகாரங்களுக்கான உதவி இயக்குநர் டாக்டர் அமல் அல் ஜாஸ்மி பேசும்போது, “2019ம் ஆண்டு முழுவதும் வந்த 42,000 வழக்குகளுடன் ஒப்பிடும்போது, 2020ம் ஆண்டில், ஆண்டின் முதல் பாதியில் 27,000 க்கும் மேற்பட்ட வழக்குகளைச் செயலாக்க முடியும் என்று விளக்கினார்.
2022 முதல் காலாண்டில் உடனடி கவனம் தேவைப்படும் அவசரகால வழக்குகளில் 100 சதவீதம் செயலாக்கப்பட்டது, அதே சமயம் இரண்டு முதல் நான்கு மணிநேரம் வரை காத்திருக்கக்கூடிய அவசரநிலை அல்லாத வழக்குகளுக்கான பதில் விகிதம் 97 சதவீதமாக இருந்தது,” என்று டாக்டர் அல் ஜாஸ்மி குறிப்பிட்டார்.