37.4 C
Dubai
August 10, 2020
UAE Tamil Web

ஈத் அல் அத்ஹா பண்டிகையை முன்னிட்டு 45 சிறைக்கைதிகளை விடுதலை செய்ய புஜைரா ஆட்சியாளர் உத்தரவு..!

Fujairah Ruler

உச்ச சபையின் உறுப்பினரும், புஜைராவின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் ஹமாத் பின் முகமது அல் ஷர்கி (Sheikh Hamad bin Mohammed Al Sharqi) ஈத் அல் அத்ஹா பண்டிகையை முன்னிட்டு புஜைராவில் உள்ள தண்டனை மற்றும் திருத்துதல் துறையின் கீழ் உள்ள 45 கைதிகளை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

கைதிகள் தமது குடும்பத்தினருடன் இணைந்து மகிழ்ச்சிடன் வாழ்வதற்கான இரண்டாவது வாய்ப்பினை இதன்மூலம் வழங்கியிருக்கிறார் ஆட்சியாளர்.

புஜைரா காவல்துறையின் தலைமைத் தளபதியான மேஜர் ஜெனரல் முகமது அகமது பின் கனிம் அல் காபி (Mohammed Ahmed bin Ghanim Al Kaabi) இதுகுறித்துப் பேசுகையில்,” ஆட்சியாளரின் இந்த அறிவிப்பு கைதிகள் சமூகத்துடன் ஒன்றி வாழவும் தங்களுடைய நடவடிக்கைகளை நன்முறையில் மாற்றிக்கொள்ளவும் உதவும் என நம்புகிறேன்” என்றார்.

துபாய், அஜ்மான், அபுதாபி ஆட்சியாளர்களைத் தொடர்ந்து ஈத் அல் அத்ஹாவை முன்னிட்டு கைதிகளை விடுதலை செய்யும் உத்தரவை புஜைரா ஆட்சியாளரும் வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க.!