புஜைராவில் சாலை சிக்னலில் தேன் விற்ற நபரை அந்த எமிரேட் காவல்துறை கைது செய்திருக்கிறது. மலிவான விலையில் தேன் அளிப்பதாகக் கூறி உரிய உரிமம் பெறாமல் தேனை விற்பனை செய்துவந்த நபரை காவல்துறை கைது செய்திருக்கிறது.
கடைகளில் 20 திர்ஹம்ஸ் மதிப்புள்ள தேனை வாங்கி, 50 திர்ஹம்ஸ்க்கு விற்பனை செய்திருக்கிறார் அரபு நாட்டைச் சேர்ந்த நபர். 35 வயதான இவர் தான் பிச்சை எடுக்கவில்லை எனவும் தேன் மட்டுமே விற்பனை செய்ததாகவும் நீதிமன்றத்தில் கூறியிக்கிறார்.
அரபு நாட்டைச் சேர்ந்த விற்பனையாளரை கைது செய்த காவல்துறை அதிகாரியின் வாக்குமூலத்தைப் பெற நீதிமன்றம் காவல்துறையைப் பணித்துள்ளது. அதன்பின்னர் இவ்வழக்கில் தீர்ப்பானது வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
