UAE Tamil Web

காலாவதியான மருந்துகளை விற்பனை செய்த மருந்தகங்களை இழுத்து மூடிய அமீரக அதிகாரிகள்..!

smartFUJAIRAH

திப்பா புஜைரா நகராட்சி இந்த வருடம் மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கையில் காலாவதியான மருந்துப் பொருட்களை விற்ற 3 மருந்தகங்களை இழுத்து மூடியுள்ளது. அதேபோல, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாத 8 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

அதிகாரப்பூர்வ தகவலின்படி தங்களது ஊழியர்களுக்கு சுகாதார அட்டை வழங்காத மற்றும் அதனைப் புதுப்பிக்காத 9 லாண்டரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. வணிக நடைமுறையில் ஈடுபடுவதற்கான உரிமத்தைப் பெறாததன் காரணமாகவும் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்துப் பேசிய நகராட்சியின் தலைமை இயக்குனரும் பொறியாளருமான ஹசன் சலீம் அல் யமாஹி,” பொதுசேவை மற்றும் சுற்றுச்சூழல் துறை இந்த வருடத்தில் 386 சோதனைகளை மேற்கொண்டுள்ளது. இதில் நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள 185 மருந்தகங்களிலும் 201 லாண்டரிகளிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதாலும், சில கடைகள் காலாவதியான உணவு மற்றும் ஒப்பனைப் பொருட்களை விற்றதாலும் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. கட்டுப்பாடுகளை மீறும் நிறுவனங்களின் மீது தயவு தாட்சணியமின்றி அபராதம் விதிக்கப்படும்” என்றார்.

கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் மேலும் இதுபோன்ற சோதனைகள் நடைபெறும் என யமாஹி தெரிவித்தார்.

இம்மாதிரியான குற்றங்கள் நடைபெறுவதை  அறிந்தால் பொதுமக்கள் நகராட்சியிடம் புகாரளிக்கலாம் என யமாஹி குறிப்பிட்டார். பொதுமக்கள் 092043333 என்ற எண்ணின் மூலம் நகராட்சியை 24 மணிநேரமும் தொடர்புகொள்ளலாம்.

தற்போதைய சுகாதார பிரச்சினைகளில் இருந்து அமீரகம் வெளியேற பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம் என யமாஹி தெரிவித்தார்.

புகார் தெரிவிக்க விரும்பும் மக்கள் 80036 என்ற எண்ணில் இலவசமாக கால் சென்டருக்கு போன் செய்யலாம். இல்லலையேல் smartFUJAIRAH என்ற ஆப் மூலமாக மக்கள் புகாரளிக்கலாம்.

smartFUJAIRAH
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap