UAE Tamil Web

வெள்ளிக்கிழமை சந்தையில் பயங்கர தீ விபத்து – கடைகள் எரிந்து நாசம்..!

-masafi-fire-

புஜைராவின் மஸாஃபி பகுதியில் உள்ள சூக் அல் ஜுமா-வில் (வெள்ளிக்கிழமை சந்தை) இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டிருக்கிறது. இவ்விபத்தினால் இங்கே உள்ள விற்பனைக் கூடங்கள் தீக்கிரையானதாக சிவில் பாதுகப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

- Advertisment -

இந்த தீ விபத்து குறித்து இன்று அதிகாலை சிவில் பாதுகாப்புப் பிரிவிற்கு தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து மருத்துவர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனால் தீ அடுத்தடுத்து பரவாமல் தடுக்கப்பட்டது.