UAE Tamil Web

துபாயில் இந்திய பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பல் கைது

துபாயில் அதிக சம்பளம் என்று கூறி பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்திய கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

துபா­யில் திரைப்­ப­டத்­துறை உட்­பட பல்­வேறு துறை­களில் பணி­யாற்­றி­னால் அதி­கம் சம்­பா­திக்­க­லாம் என்று ஆசை காட்டி அழைத்­துச் செல்­லப்­பட்ட பல பெண்­கள் அங்கு மதுபான விடு­தி­களில் ஆபாச நட­ன­மா­ட­வும் பாலி­யல் தொழிலில் ஈடு­ப­ட­வும் கட்­டா­யப்­ப­டுத்­தப்­பட்­டு உள்­ள­னர்.

இது­கு­றித்து பாதிக்­கப்­பட்ட ஒரு பெண் அளித்த புகா­ரின் பேரில் பெங்­க­ளூரு காவல்­துறை வழக்­குப் பதிவு செய்து, 7 பேர் கொண்ட கும்­ப­லைக் கைது செய்துள்­ளது.

இரண்டு லட்­சம் ரூபாய் சம்­பா­திக்­க­லாம் என்று ஆசை காட்டி இது­வரை 95 பெண்­களை இந்­தக் கும்­பல் துபாய்க்கு அனுப்பி வைத்­துள்­ள­தா­க பெங்களுரு காவல்துறை அதிகாரி தெரி­வித்தார்.

துபாய் சென்­ற­தும் அந்­தப் பெண்­கள் மது விடு­தி­களில் ஆபாச நட­னம் ஆடும்­படி கட்­டா­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர். மேலும் பாலி­யல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட வேண்­டும் என்­றும் நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டும் உள்ளனர்.

பாதிக்­கப்­பட்ட பெண் ஒரு­வர் அளித்த புகா­ரின் பேரில் மைசூரு, சேலம், சென்னை, புதுவை, திரு­வள்­ளூர் பகு­தி­க­ளைச் சேர்ந்த ஏழு பேர் கைதாகி உள்னர்.

கைதான அனை­வ­ருமே திரைத்­து­றை­யில் வேலை பார்த்து வரு­ப­வர்­கள் என்­றும் துணை நடி­கர்­களு­டன் தொடர்­புள்­ள­வர்­கள் என்­றும் தெரி­ய­வந்­துள்­ளது.

துபா­யில் சிக்கி உள்ள 95 பெண்­க­ளை­யும் மீட்க விரை­வாக நட­வ­டிக்கை எடுக்கப்­படும் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap