UAE Tamil Web

அபுதாபி: குடியிருப்பு கட்டிடத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து

அபுதாபி ஹம்தான் பகுதியில் குடியிருப்பு கட்டிட ஒன்றில் நள்ளிரவு திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பின்னர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து தீ விபத்தை கட்டுப்படுத்தி, விசாரணை மேற்கொண்டனர். இந்த விபத்திற்கு கேஸ் சிலிண்டர் வெடித்தது தான் காரணம் என்று தெரிவித்தனர்.

புதன்கிழமை இன்று நள்ளிரவு 12.09am மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சிவில் பாதுகாப்பு கட்டுப்பாட்டு துறைக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து தீ அணைப்பு வீரர்கள் கட்டிடத்தில் இருந்த மக்களை வெளியேற்றி தீயை அணைத்து நிலைமையை கட்டுப்படுத்தினர்.

இந்த தீ விபத்தின் பெரிய பொருள் சேதங்களும், உயிர் சேதங்களும் நிகழவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் மக்கள் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டும் நம்பவும், தவறான தகவல்களை பரப்புவதை முற்றிலும் தவிர்த்துக் கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு சிவில் பாதுகாப்பு கட்டுப்பாட்டு துறை வலியுறுத்தியுள்ளது.

1 Share
Share via
Copy link