உலகெங்கிலும், ஓமைக்ரான் பரவல் காரணமாக பல்வேறு நாடுகள் பயணக்கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.
அமீரகத்திலும் கொரோனா தொற்றானது அதிகமாக இருப்பதால் அரசு நெறிமுறைகளை இன்னும் கடுமையாக்கியுள்ளது.
நீங்கள் அமீரகத்திற்கு பயணிப்பவராக இருந்தால், உங்களுக்கான முழு பயண நெறிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
அபுதாபி(எதிஹாட் ஏர்வேஸ் இணையதளத்தில் இருந்து பெறப்பட்ட தகவல்கள்)
ICA ஸ்மார்ட் டிராவல் சேவை மூலம் பதிவு செய்தல்
அமீரக குடிமக்களை தவிர்த்து, குடியிருப்பாளர்கள் அனைவரும் விமானத்தில் பயணிப்பதற்கு முன், ICA ஸ்மார்ட் டிராவல் சேவை மூலம் பதிவு செய்ய வேண்டும். அமீரகத்தில் முழுமையாக தடுப்பூசி போட்டிருந்தால், நீங்கள் பயணிக்கும் முன் எந்த நேரத்திலும் இதில் பதிவு செய்யலாம். தடுப்பூசி சான்றிதழை நீங்கள் பதிவேற்ற வேண்டிய அவசியமில்லை.
அமீரகத்திற்கு வெளியே முழுமையாக தடுப்பூசி போட்டிருந்தால், விமானத்தில் பயணிப்பதற்கு 5 நாட்களுக்கு முன்பு பதிவு செய்ய வேண்டும். நீங்கள் பதிவு செய்த உடன், மின்னஞ்சல் மூலம் QR குறியீட்டை பெறுவீர்கள்.
நீங்கள் தடுப்பூசி போடவில்லை என்றால், நீங்கள் பறக்கும் முன் எந்த நேரத்திலும் பதிவு செய்யலாம்.பதிவுசெய்ததும், மின்னஞ்சல் மூலம் QR குறியீட்டைப் பெறுவீர்கள
கொரோனா சோதனை :
ஒவ்வொரு எதிஹாட் ஏர்வேஸ் விமானத்துக்கு முன்பும், பயணிகள் கொரோனா பரிசோதனை செய்யும் போது, நெகட்டிவ் என முடிவு வர வேண்டும். அபுதாபி உங்கள் இறுதி இலக்காக இருந்தால், உங்கள் விமானம் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு இந்த சோதனை செய்திருக்க வேண்டும். இதில் சில விதிவிலக்குகளும் பொருந்தும். போக்குவரத்துப் பயணிகளுக்கும் கோவிட் பரிசோதனை அவசியம்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற சில நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமானத்தில் ஏறிய ஆறு மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ரேபிட் பிசிஆர் சோதனையும் தேவைப்படுகிறது.
அபுதாபி வந்தவுடன் தனிமைப்படுத்தல் மற்றும் கொரோனா சோதனை
பசுமைப்பட்டியல் நாடுகளில் இருந்து, அபுதாபி வந்தவுடன் கொரோனா பரிசோதனை செய்யப்படும். அவர்களுக்கு தனிமைப்படுத்தல் இல்லை. ஆறாம் நாள் மீண்டும் சோதனை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
பசுமைப்பட்டியலில் இல்லாத இந்தியா போன்ற வேறு எந்த இடத்திலிருந்தும் அபுதாபி விமான நிலையத்துக்கு வருபவர்கள், அங்கு வந்தவுடன் சோதனை மேற்கொள்ள வேண்டும். அவர்களுக்கு தனிமைப்படுத்தல் இல்லை. நான்காவது மற்றும் எட்டாவது நாட்களில் சோதனை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
துபாய் (எமிரேட்ஸ் இணையதளத்தில் இருந்து பெறப்பட்ட தகவல்கள்)
GDRFA/ICA ஒப்புதல்
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் சூடானில் இருந்து வரும் பயணிகள் தவிர, அனைத்து UAE குடியிருப்பாளர்களும் GDRFA அல்லது ICA அனுமதியின்றி துபாய்க்கு பயணிக்கலாம்.
புதிதாக வழங்கப்பட்ட ரெசிடென்ஸ் அல்லது எம்ப்ளாய்மெண்ட் விசா,10 ஆண்டு UAE கோல்டன் விசா, முதலீட்டாளர் அல்லது பங்குதாரர்கள் விசா, விசிட் விசா போன்ற பிற விசாக்களைக் கொண்ட பயணிகளுக்கு GDRFA ஒப்புதல் தேவையில்லை.
PCR சோதனை
இந்தியா, இலங்கை , பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் சூடானில் இருந்து வரும் பயணிகள் 48 மணி நேரத்திற்குள் நடத்தப்பட்ட PCR பரிசோதனையின் நெகட்டிவ் முடிவைச் சமர்ப்பிக்க வேண்டும். புறப்படுவதற்கு ஆறு மணி நேரத்திற்குள் நடத்தப்பட்ட ரேபிட் PCR சோதனையிலும் நெகட்டிவ் முடிவையும் சமர்ப்பிக்க வேண்டும்.
அனைத்து நாடுகளிலிருந்தும் (GCC உட்பட) துபாய்க்குப் பயணிக்கும் பயணிகள், புறப்படுவதற்கு 48-72 மணிநேரத்திற்கு முன் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் நெகட்டிவ் முடிவைப் பெற்றிருக்க வேண்டும்.
இங்கிலாந்தில் இருந்து பயணம்
இங்கிலாந்தில் இருந்து துபாய்க்கு செல்லும் அனைத்து பயணிகளும் புறப்படுவதற்கு 48 மணிநேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட PCR சோதனையின் நெகட்டிவ் முடிவைப் பெற்றிருக்க வேண்டும்.
RT-PCR சோதனை முடிவு சான்றிதழில் மாதிரி எடுக்கப்பட்ட இடத்தைக் குறிப்பிட வேண்டும்.
இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து வரும் பயணிகள் துபாய் விமான நிலையத்திற்கு வரும்போது PCR பரிசோதனை செய்ய வேண்டும். அத்தகைய பயணிகள் சோதனை முடிவைப் பெறும் வரை அவர்களது இல்லத்தில் இருக்க வேண்டும்.
ஷார்ஜா மற்றும் ராஸ் அல் கைமா
(ஏர் அரேபியா இணையதளத்தில் இருந்து பெறப்பட்ட தகவல்கள்)
ICA ஸ்மார்ட் டிராவல் சேவை மூலம் பதிவு செய்தல்
புதிதாக வழங்கப்பட்ட இ-விசாவுடன் ஷார்ஜா மற்றும் ராஸ் அல் கைமாவிற்கு வரும் அனைத்து பயணிகளும் அவர்கள் புறப்படுவதற்கு முன் பதிவு செய்ய வேண்டும்.
ஷார்ஜாவிற்கு பறக்கும் அபுதாபி ரெசிடென்ஸ் விசா வைத்திருப்பவர்கள் தங்கள் நுழைவு நிலையை சரிபார்க்க விமானத்தை முன்பதிவு செய்வதற்கு முன் uaeentry.ica.gov.ae இணையதளத்தை பார்க்கவும். ஷார்ஜா அல்லது வேறு எமிரேட்டில் வழங்கப்படும் விசாக்களுக்கு முன் அனுமதி தேவையில்லை.
PCR சோதனை
இந்தியா, பாகிஸ்தான், கென்யா, நேபாளம், பங்களாதேஷ், உகாண்டா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள், விமானம் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்குள் நடத்தப்பட்ட PCR சோதனையில் நெகட்டிவ் முடிவைப் பெற வேண்டும். அவர்கள் புறப்படுவதற்கு ஆறு மணி நேரத்திற்கு முன்னதாக விமான நிலையத்தில் விரைவான PCR பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சோதனையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
பிற நாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமானம் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் கொரோனா சோதனை செய்ய வேண்டும். அனைத்து பயணிகளும் அமீரகம் வந்தவுடன் சோதனை செய்யப்படுவார்கள். அமீரக குடிமக்கள் மற்றும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சோதனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.