தமிழகத்தில் லுலு நிறுவனம் வந்தால் சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அதனை அனுமதிக்கமாட்டோம் என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க துபாய் சென்றார். அப்போது லுலு குழுமம் 3500 கோடி ரூபாய் முதலீட்டில் 5000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்தது.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறிகையில், “தமிழகத்தில் லுலு நிறுவனம் ஒரு செங்கலை வைக்க கூட பாஜக அனுமதிக்காது. லுலு நிறுவனத்தால் சிறு வணிகர்கள் காணாமல் சென்று விடுவர். லுலு நிறுவனம் கொண்டுள்ள வியாபார மாதிரி, சிறு வியாபாரிகளை அழித்து பெரிய பெரிய நிறுவனங்கள் கட்டும் நோக்கில் தமிழகத்திற்குள் நுழையும்போது அதை பாஜக ஒருபோதும் அனுமதிக்காது” என்று கூறினார்.