UAE Tamil Web

வெளிநாடுகளில் இருந்து மும்பை வருவோர் தடுப்பூசி எடுத்திருந்தால் குவாரண்டைனில் விலக்கு : ஏர் இந்தியா எக்ஸ்ப்ரஸ் அறிவிப்பு..!

Air India express

கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக்கொண்ட வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோர் நிறுவன குவாரண்டைன் இருக்கத் தேவையில்லை என இந்தியாவின் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் நேற்று தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில்,” கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றவரா நீங்கள்? அப்படியானால் மும்பை வந்திறங்கியவுடன் நிறுவன குவாரண்டைனில் இருந்து நீங்கள் விலக்குப் பெறலாம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கியமாக இது மும்பை வருபவர்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் டிரான்ஸிட் பயணிகளுக்கு இந்த விதிமுறை பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்களுடைய 2 தடுப்பூசி சான்றிதழ்களையும் சுய உறுதிமொழி படிவத்தையும் சமர்பிக்கவேண்டும்.

தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத வெளிநாட்டுப் பயணிகள் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி 14 நாட்கள் கட்டாய குவாரண்டைன் இருத்தல் வேண்டும். அதில் 7 நாட்களுக்கு பயணிகள் தங்களுடைய செலவில் நிறுவன குவாரண்டைனிலும் 7 நாட்கள் தங்களுடைய வீட்டிலும் குவாரண்டைன் இருத்தல் வேண்டும். இந்தக் காலத்தில் பயணிகள் தங்களது உடல் நலத்தை கண்காணிக்கவேண்டும்.

Air India express
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap