இஸ்லாமிய மார்க்கத்தின் மிக முக்கிய தலங்களாகக் கருதப்படும் மெக்கா, மெதீனா-வில் முழு திறனில் மக்களை அனுமதிக்க சவூதி அரசு உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 17 ஆம் தேதிமுதல் இந்நடைமுறை அமலுக்கு வருகிறது.
இருப்பினும் வழிபாட்டாளர்கள் அனைவரும் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களையும் பெற்றிருத்தல் வேண்டும். பொது இடங்கள், போக்குவரத்து, ரெஸ்டாரன்ட், சினிமா தியேட்டர்கள் ஆகியவற்றில் முழு கொள்ளளவில் இயங்க அரசு அனுமதித்துள்ளது.
திறந்தவெளிகளில் பொதுமக்கள் மாஸ்க் அணிய தேவையில்லை எனவும் மூடப்பட்ட அறைகளில் இருக்கும்போது அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் அணியவேண்டும் எனவும் அரசு வலியுறுத்தியுள்ளது.
மக்கள் அனைவரும் Tawakkalna கண்காணிப்பு அப்ளிகேஷன் மூலமாக கண்காணிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மதீனாவில் உள்ள நபி (ஸல்) மசூதிக்கும் பொருந்தும் என அரசு தெரிவித்துள்ளது.
