தமிழகத்தில் நாளை 3 தேதி அன்று ஈத் அல் ஃபித்ர் கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி சலாஹுத்தீன் முஹம்மத் அய்யூப் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. தமிழகத்திலும் கடந்த ஒரு மாத காலமாக ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. இன்றுடன் நோன்பு நிறைவடைந்து, நாளை நோன்பு பெருநாள் கொண்டாடப்படவுள்ளது.
இந்நிலையில் ரம்ஜான் கொண்டாடட்டம் குறித்து தமிழக அரசின் தலைமை ஹாஜி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். நேற்று ஷவ்வால் பிறை தெரியாத காரணத்தால் நாளை செவ்வாய்கிழமை அன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தெரிவித்து உள்ளார்.