சமூக வலைத்தளங்களின் ஜாம்பவானான பேஸ்புக், தனது பெயரை மாற்ற இருப்பதாக தி வெர்ஜ், மெட்டாவெர்ஸ் போன்ற பிரபல பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்நிறுவனத்தின் தலைவர் மார்க் சக்கர்பெர்க் வரும் அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெற இருக்கும் பேஸ்புக் நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் இந்த அறிவிப்பை வெளியிடுவார் என நம்பப்படுகிறது.
இன்ஸ்டாகிராம், வாட்சாப் போன்ற நிறுவனங்களை இயக்கிவரும் பேஸ்புக் தனது பெயரை மாற்ற இருப்பதாக வெளிவந்துள்ள செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியிருக்கிறது.
பேஸ்புக்கிற்கு புதிய பெயர் வைக்கவேண்டுமானால் நீங்கள் என்னென்ன பெயரை பரிந்துரை செய்வீர்கள்? என்பதைக் கமெண்ட்டில் தெரிவியுங்கள்.
