பிரபல நெதர்லாந்து கால்பந்து நட்சத்திரமான கிளாரன்ஸ் சீடோர்ஃப் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஏசி மிலன், ரியல் மாட்ரிட் மற்றும் அஜாக்ஸ் அணிகளுக்கு விளையாடிய வீரர் கிளாரன்ஸ் சீடோர்ஃப் சமூக ஊடகங்களில் அறிவித்தார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “முஸ்லீம் குடும்பத்தில் நான் இணைந்ததற்கு வாழ்த்து தெரிவித்துள்ள அனைவருக்கும் நன்றி.
View this post on Instagram
உலகெங்கிலும் உள்ள அனைத்து சகோதர சகோதரிகளுடன் இணைவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், குறிப்பாக இஸ்லாத்தின் அர்த்தத்தை எனக்குக் ஆழமாகக் கற்பித்தது எனது மனைவி சோபியா மக்ரமதி. நான் எனது பெயரை மாற்றவில்லை, எனது பெற்றோர், கிளாரன்ஸ் சீடோர்ஃப் என்று வழங்கிய எனது பெயரிலேயே இருக்க விரும்புகிறேன்” என்றார்.
இது குறித்து அவரது மனைவி சோபியா இன்ஸ்டாகிராமில், “என் கணவர் முஸ்லீம் குடும்பத்தில் இணைவதில் சிறப்புமிக்க தருணத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
