UAE Tamil Web

சவுதியில் எண்ணெய் நிறுவனங்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் திடீர் தாக்குதல்.!

ஏமனின் ஹவுதி அமைப்பு, தங்கள் நாட்டில் உள்ள எண்ணெய் நிறுவன பகுதிகளை குறி வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

ஏமன் அரசுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே, 2014இல் இருந்து உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அரசு படைகளுக்கு, சவுதி அரேபியா ஆதரவு தெரிவித்து வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது.

தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில், சவுதி உள்ளிட்ட எண்ணெய் வளமிக்க நாடுகளில் உற்பத்தியை அதிகரிக்கும்படி, மேற்கத்திய நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் சவுதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான ஆரம்கோ லாபத்தை 124 சதவீதம் உயர்ந்துள்ளதாக சமீபத்தில் அறிவித்தது.

இதையடுத்து சவுதியில், இந்த நிறுவனத்துக்கு சொந்தமான சமையல் கேஸ் தயாரிக்கும் ஆலை, கடல்நீரை குடிநீராக்கும் ஆலை மற்றும் மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ஹவுதி கிளார்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக சவுதி கூறியுள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap