UAE Tamil Web

முக்கியச் செய்தி : ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச விமானப் போக்குவரத்துத் தடையை விலக்குவதாக இந்திய அரசு அறிவிப்பு..!

கொரோனா காரணமாக இந்தியாவில் சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு தடை விதிப்பதாக இந்திய விமானப் போக்குவரத்து தலைமை இயக்குனரகம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவித்தது. இருப்பினும் சிறப்பு விமானப் போக்குவரத்து உடன்படிக்கைகள் மூலம் வெளிநாடுகளுக்கு மக்கள் பயணித்து வந்தனர்.

இந்நிலையில் டிசம்பர் 15 ஆம் தேதிமுதல் சர்வதேச நாடுகளுக்கு மீண்டும் விமானப் போக்குவரத்தை துவங்குவதாக விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பின் அடிப்படையில் நாடுகளை 3 வகையாக பிரித்து விமானங்கள் இயக்கப்படும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

6 Shares
Share via
Copy link