UAE Tamil Web

உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா உள்ளே சென்று சுற்றி பார்க்கலாம் வாங்க.!

burj khalifa

புர்ஜ் கலீஃபாவின் சாதனைகளை எத்தனை தடவை படித்தாலும் சலிக்காத ஒரு அற்புதமாக திகழ்கிறது. அதன் சாதனைகள் மற்றும் அது உருவான சுவாரஸ்யங்களை தெரிந்துகொள்ள இந்த லிங்க் உங்களுக்கு பயன்படும். இந்தத் தொகுப்பில் புர்ஜ் கலீஃபாவினுள் எப்படியெல்லாம் நேரத்தை செலவழிக்கலாம் என்னவெல்லாம் கண்டு மகிழலாம் என்பதை காண்போம் வாருங்கள்!

வானுயர்ந்து மயக்கும் அழகிய காட்சிகள்:

observation deckபுர்ஜ் கலீஃபாவில் உலகின் மிக உயர்ந்த வெளிப்புற கண்காணிப்பு தளத்திலிருந்து துபாயின் மூச்சடைக்கக்கூடிய அற்புத உயரத்தை கண்டு ஆச்சரியப்பட தயாராகுங்கள். 124 வது மாடி கண்காணிப்பு தளத்தில் (Observation Deck) அதிக சக்தி வாய்ந்த, அவாண்ட்-கார்ட் தொலைநோக்கிகள் மூலம் கீழே உள்ள அழகான உலகத்தை நீங்கள் நெருக்கமாகப் பார்க்கலாம். இது ஒரு திகிலான இன்பமாக நிச்சயமாக அமையும்.

ஓய்வெடுக்க சிறந்த க்ளப்:

burj clubபொழுதுபோக்கு, உடற்பயிற்சி மற்றும் ஆடம்பரங்களின் சரியான கலவையை வழங்கும் ஒரு உயர்தர ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி க்ளப் என்றால் அது புர்ஜ் க்ளப் தான். இந்த க்ளபை ஓய்வெடுப்பதற்கான ஒரு தனி உலகம் என்று கூட கூறலாம். அதற்கு ஏற்றவாறு இது உலகத்தரம் வாய்ந்த ஸ்பா, அசத்தும் ரூஃப் டாப் மற்றும் ஒரு உடற்பயிற்சி கூடத்தை கொண்டுள்ளது.

இந்த ரூஃப் டாப் நீந்துவதற்கு ஏற்ற ஒரு நீச்சல் குளத்துடனும், உணவருந்த ஏற்ற பல்சுவை உணவகங்களுடனும் அமைந்த ஒரு ஒதுங்கிய அமைதியான சூழல் ஆகும். வாழ்வில் முக்கியமான நபரை கவர யாரேனும் நினைத்திருந்தால் இந்த இடத்திற்கு அழைத்துச் செல்ல தவற வேண்டாம். அவ்வளவு அழகை தன்னுள் அடக்கி கொண்டுள்ளது இந்த ரூஃப் டாப்.

AT.MOSPHERE- ல் உணவருந்தவும்:

At.mosphere-1உலகின் மிக உயர்ந்த உணவகமான AT.MOSPHERE-ல் மிகச்சிறந்த ஆடம்பர உணவு அனுபவத்தை அனுபவிக்கலாம். இது புர்ஜ் கலீஃபாவின் 122 ஆம் தளத்தில் அமைந்துள்ளது. இதில் கொடுக்கப்படும் சுவையான உணவுகள், இனிப்பு வகைகள், பருவகால விருந்துகள் மற்றும் பல உணவின்​​ சுவையை துபாயின் உச்சியில் மெய்மறந்து ருசிக்கும் சுகமே தனி தான்.

வண்ண வண்ண மிட்டாய் வேண்டுமா?

CandyliciousTDM_IMG00-minநீங்கள் ஒரு மிட்டாய் பிரியர் என்றால் உங்களுக்கு ஏற்ற இடமும் புர்ஜ் கலீபாவினுள் உள்ளது. உங்கள் குழந்தை பருவ காலத்தை நினைவூட்டும் வண்ண வண்ண நிறங்களுடன் நாவில் கரையும் சுவையை CANDYLICIOUS உங்களுக்கு அளிக்கும். புர்ஜ் கலீஃபாவின் கண்காணிப்பு தளத்திலிருந்து (Observation Deck) டவுன்டவுன் துபாயின் பிரமிப்பூட்டும் காட்சிகளை ரசித்துக்கொண்டே , ​​கேண்டிலீசியஸில் உள்ள சாக்லேட் மரத்திலிருந்து சில மிட்டாய்களைப் பறித்து சாப்பிடும் அனுபவமே தனி என்கிறார்கள் பார்வையாளர்கள்.

The Lounge:

The Loungeதரைமட்டத்திலிருந்தது 585 மீட்டர் உயரத்தில் உள்ள புர்ஜ் கலீஃபாவின் லவுஞ்ச் (THE LOUNGE) உணவகத்தில் மேகத்துடன் உரசிக்கொண்டு ஒரு காபி குடிக்கும் அனுபவத்திற்கு ஈடு இணையே இல்லை. இது இரவு நேரத்தில் வண்ணமயமான ஒளிவிளக்குகளுடன் புத்துணர்ச்சியை தூண்டும் இசையுடன் கூடிய உலகின் மிக உயரமான லவுஞ்ச் ஆக திகழ்கிறது. இது புர்ஜ் கலீஃபாவின் 152 முதல் 154 வது மாடியில் அமைந்துள்ளது.

துபாய் நீரூற்றை கண்டு களியுங்கள்:

dubai-fountains-q1புர்ஜ் கலீஃபாவின் கண்காணிப்பு தளத்திலிருந்து (Observation Deck) துபாய் நீரூற்றை பிரத்யேகமாக அதன் வசீகரிக்கும் நீர், ஒளி மற்றும் இசையோடு காட்சிகளைக் காணலாம். இவ்வளவு உயரத்திலிருந்து கீழிருக்கும் துபாய் நீரூற்றை பார்ப்பது வானில் நட்சத்திரங்களை காண்பது போன்ற சிலிர்ப்பினை தருகிறது.

சுவைக்கு சுவை சேர்க்கும் அர்மானி டெலி:

மத்திய கிழக்கு, ஐரோப்பா மற்றும் அதற்கு அப்பால் உள்ள நாடுகளின் சுவையான உணவுகளை அன்பளிப்பாக உங்கள் நாவிற்கு அளிக்க விரும்புறீர்களா? அப்படியென்றால் புர்ஜ் கலீஃபாவின் லாபியின் உள்ளே அமைந்துள்ள அர்மானி டெலிக்கு வாருங்கள். பிரம்மிக்க வைக்கும் காட்சிகளுடன் ஒரு அற்புதமான உலகத் தரம் வாய்ந்த விருந்தோம்பலை வழங்குகிறது இந்த அர்மானி டெலி.

பார்வை நேரம்:

உங்கள் வசதிக்கு ஏற்ப நீங்கள் புர்ஜ் கலீஃபாவைப் பார்வையிடலாம் என்றாலும் சிறந்த பார்வை நேரம் என்று கேட்டால் அது சூரியன் மறையும் நேரம் தான். எனவே, மாலை 4:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை உள்ள நேரங்கள் பார்வையிட ஏற்ற நேரமாகக் கருதப்படுகின்றன. பார்வையாளர்கள் அனைவரும் இந்த நேரத்தையே விரும்புவதினால் டிக்கெட் விலை இந்நேரங்களில் சற்று அதிகமாகவே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

புர்ஜ் கலீஃபா (At the Top) டிக்கெட் விலை (Level 124 & 125):
பொது நுழைவு கட்டணம் (General Admission Entry):

சாதாரண நேர (NON-PRIME HOURS) டிக்கெட் விலை (காலை 9 மணி முதல் மாலை 3:30 மணி வரை மற்றும் மாலை 6:30 மணி முதல் நிறைவு நேரம் வரை):

12 வயதுக்கு மேல் – 154 AED லிருந்து

4-12 வயது – 119 AED லிருந்து

4 வயதுக்கு கீழ்- இலவசம்

PRIME HOURS டிக்கெட் விலை (மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை):

12 வயதுக்கு மேல் – 229 AED லிருந்து

4-12 வயது – 137 AED லிருந்து

4 வயதுக்கு கீழ்- இலவசம்

விரைவு டிக்கெட் (FAST TRACK ENTRY):

டிக்கெட் விலை: 12 வயதுக்கு மேல்: 323 AED

குறிப்பு: இந்த டிக்கெட் பெறுவதன் மூலம் நீங்கள் வெகுநேரம் வரிசையில் (QUEUE) காத்திருக்க தேவையில்லை. உடனடியாக லிஃப்ட்டில் ஏறி, தளம் 124 & 125 க்கு செல்லலாம்.

புர்ஜ் கலீபா தளம் 148 (At the Top Sky) டிக்கெட் விலை:

சாதாரண நேர (NON-PRIME HOURS) டிக்கெட் விலை (மாலை 7:00 மணி முதல் நிறைவு நேரம் வரை):

12 வயதுக்கு மேல் – 364 AED

4-12 வயது – 364 AED

4 வயதுக்கு கீழ்- இலவசம்

PRIME HOURS டிக்கெட் விலை (காலை 9:30 மணி முதல் மாலை 6 மணி வரை):

12 வயதுக்கு மேல் – 464 AED

4-12 வயது – 464 AED

4 வயதுக்கு கீழ்- இலவசம்

விஐபி லவுஞ்ச் (VIP LOUNGE) – தளம் 154 டிக்கெட் விலை

நீங்கள் பார்வையிடக்கூடிய இந்த விஐபி லவுஞ்ச் புர்ஜ் கலீஃபாவின் மிக உயர்ந்த தளத்தில் அமைந்துள்ளது. இங்கே நுழைய சூரியன் மறையக்கூடிய நேரத்தில் அதாவது மாலை 4 மணிக்கு மேல் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான டிக்கெட் விலை – ஒரு நபருக்கு 754 AED.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap