கோவிட்-19 தொற்று நோய்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை சவுதி அரேபிய அரசு படிபடியாக நீக்கி வருகிறது. அதன் எதிரொலியாக சவுதி விதிக்கப்பட்டிருந்த ஒரு முக்கிய கட்டுப்பாட்டை விலக்கியுள்ளது அரசு.
சவுதி அரேபியாவிற்கு செல்லும் பயணிகள் இனி கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று சவுதி அரசு அறிவித்துள்ளது.
சவுதியில் நடைமுறைக்கு வந்துள்ள முக்கிய அறிவிப்புகள் ஒவ்வொன்றையும் தெரிந்து கொள்வோம்:
1. சவுதிக்கு வருபவர்களுக்கு இனி நிறுவன தனிமைப்படுத்தல், வீட்டு தனிமைப்படுத்தல் மற்றும் PCR சான்றிதழ் தேவையில்லை. ஆனால் விசிட் விசாவில் வருபவர்கள் அனைவரும் கண்டிப்பாக கோவிட் இன்சூரன்ஸ் எடுத்திருக்க வேண்டும். கோவிட் காப்பீடு 90 ரியால்களில் இருந்து தொடங்குகிறது. மேலும் விசிட் விசாக்களுக்கான காப்பீடும் தொடரும்.
2. சவுதி அரேபியாவிற்கு நேரடி பயணத் தடை உள்ள நாடுகளுக்கு இருந்த தடை விலக்கப்பட்டுள்ளது.
3. மக்கா, மதினா பெரிய மசூதிகளில் மற்றும் சவுதியில் உள்ள அனைத்து மசூதிகளிலும் சமூக இடைவெளியை இனி கடைப்பிடிக்க வேண்டியதில்லை. வணிக நிறுவனங்கள் உட்பட அனைத்தும் பழையபடி செயல்படலாம்.
4. திறந்த பகுதிகளில் முகக்கவசம் அணிய அவசியமில்லை. அதே நேரத்தில் மூடிய உட்புறங்களில் முகக்கவசம் அணிய வேண்டும். அதாவது, வணிக நிறுவனங்களிலும், மூடிய வாகனங்களிலும், பணியிடங்களிலும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.