UAE Tamil Web

2020 ஆம் ஆண்டைப்பற்றி ஒரு வார்த்தையில் சொல்லுங்கள்..!

UAE resumes issuing permits

உலக வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும் ஆண்டாக 2020 இருக்கும். பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் இந்த வருடத்தைத் துவங்கியவர்களுக்கு ஏமாற்றத்தை மட்டுமே இந்த ஆண்டு அளித்திருக்கிறது. ஒரு நுண் கிருமி உலக வரலாற்றை அதன் வளர்ச்சியை ஸ்தம்பிக்கச் செய்துவிட்டது.

- Advertisment -

பொருளாதார வீழ்ச்சி, வேலையிழப்பு, உணவுத் தட்டுப்பாடு என கொரோனா ஏற்படுத்திய தாக்கங்கள் கொஞ்சநஞ்சம் அல்ல. இருப்பினும் நமக்குள் இருக்கும் மனிதத்தை நமக்கே அறிமுகப்படுத்தியிருக்கிறது இந்த வருடம்.

கொடும் கொரோனாவால் லட்சக்கணக்கில் மனிதர்கள் செத்து வீழ்கையில் கண்கள் கலங்காமல் இருக்கவில்லை. வீழ்ச்சிகள், சறுக்கல்கள் ஆகியவை எப்போதும் நிலையல்ல. இருளில் மட்டுமே உலக இயக்கம் நின்றுவிடப் போவதில்லை எனவும் நாம் உணர்ந்துகொண்ட வருடம் இது.

கடின சூழல்களிலும் தப்பிப்பிழைக்கும் ஆற்றல் இருக்கவேண்டும் என இந்த ஆண்டு உணர வைத்திருக்கிறது. இப்படி நமக்கு பலப்பல அனுபவங்களை இந்த வருடம் அளித்திருக்கிறது. உங்களுடைய வாழ்க்கையை இந்த வருடம் எவ்வாறு பாதித்தது? என்பதை ஒரு வார்த்தையில் தெரிவியுங்கள்.

பள்ளத்தாக்கில் நீர் விழுந்த பிறகுதான் அதன் ஆக்ரோஷத்தின் உச்சத்தினை நம்மால் கண்டுகொள்ள முடிகிறது. அப்படி இந்தாண்டு பல தடைகளைக் கடந்துவந்த நமக்கு எதிர்வரும் ஆண்டு சிறப்பானதாக இருக்கும் என நம்புவோம்.