கத்தார் ஏர்வேஸின் டெல்லி-தோஹா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணாமாக 100க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
கத்தார் ஏர்வேஸ் QR579 என்ற விமானம் டெல்லியில் இருந்து தோஹாவிற்கு செல்லவிருந்தது.
இது குறித்து கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் ஒரு கூறுகையில், மார்ச் 21 இன்று டெல்லியில் இருந்து தோஹாவிற்கு சென்றுக்கொன்டிருந்த கத்தார் ஏர்வேஸ் விமானத்தின் சரக்கு பகுதியில் திடீரென்று புகைந்ததை கண்டறிந்ததால் அவசர நிலைக்காக பாகிஸ்தானின் கராச்சிக்கு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
இந்நிலையில் பயணிகளை தோஹாவிற்கு கொண்டு செல்ல நிவாரண விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்காக கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் பயணிகளின் சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டது.