ராமலான் மாதம் ஏப்ரல் 2, 2022 ஆம் தேதி துவங்கும் என எகிப்து வானியல் மற்றும் புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரமலான் மாதத்தின் முதல் பிறை ஏப்ரல் 1 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தெரியும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இது இஸ்லாமிய மாதமான ஷபானின் 29 ஆம் தேதியாகக் கருதப்படுகிறது. ஆகவே, ஏப்ரல் 2 ஆம் தேதி ரமலான் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் 1 ஆம் தேதி மாலை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வெறுங்கண்ணால் பிறையைப் பார்க்க முடியும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். எனவே, அடுத்த நாளான சனிக்கிழமை முதல் நோன்பு துவங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
அமீரகத்தில் ரமலான் மாதத்தின் துவக்கம் மற்றும் ஈத் அல் பித்ர் கொண்டாடப்படும் தேதி ஆகியவற்றை பிறை பார்க்கும் கமிட்டி முடிவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.