UAE Tamil Web

ரஷ்யா-உக்ரைன் போர்: தனது தாய் அழைத்தும் உக்ரைனை விட்டு வராத இந்திய மாணவி.. காரணம் என்ன..?

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் இன்றுவரை  நீடித்து வருகிறது.  சர்வதேச அளவில் பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் உக்ரைனுக்கு எதிரான தாக்குதலிலிருந்து ரஷ்யா பின்வாங்க தயாராக இல்லை.

உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்டு அழைத்து வரும் பணியை இந்திய அரசு  தீவிரமாக செய்து வருகிறது.

இந்தச் சூழ்நிலையில் குறிப்பிட்ட சில காரணங்களுக்காக, இந்தியாவுக்கு வர விரும்பவில்லை என்றும் ஒரு மாணவி தெரிவித்துள்ளனர்.

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மாணவி நேஹா, உக்ரைன் மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். கல்லூரி விடுதியில் இடமில்லாததால் ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கி படித்து வருகிறார்.

இந்த நிலையில், ரஷ்ய உக்ரேனில் போர் தாக்குதல் நடைத்திவரும் நிலையில், உக்ரைன் நாட்டு மக்கள் நாட்டை விட்டு வெளியேறினர். எல்லையை அடைய முடியாத மக்கள் பலரும் பாதுகாப்புக்காக பல்லத்தாக்குகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், 18-60 வயதுக்குட்பட்ட ஆண்கள் நாட்டை வெளியேறத் தடை என்று உக்ரைன் அரசு அறிவித்தது. மேலும் ஆண்கள் ஆர்வம் இருந்தால்  ராணுவத்தில் இணையவும் உக்ரைன் அரசு கேட்டுக்கொண்டது.

இதன் விளைவாக, நேஹா தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரும் ராணுவத்தில் இணையச் சென்றுவிட்டார். தற்போது பல்லாத்தாக்கு பகுதியில் அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் நேஹாவும் தங்கி உள்ளார்.

தனது மகள் நேஹாவை இந்தியாவுக்கு அழைத்துவர அவரது தாய் முயற்சிகளைச் செய்த நிலையில், “இப்படி ஒரு இக்கட்டான சூழலில் வீட்டு உரிமையாளரின் குழந்தைகளைத் தனியாக விட்டு நான் இந்தியா வர விரும்பவில்லை” என்று நேஹா தெரிவித்துள்ளார்.

நெருக்கடியான காலகட்டத்தில் மனிதம் தான் சிறந்தது என்று நிரூபித்துக்காட்டி இருக்கிறார் நேஹா. இந்நிலையில் நேஹாவின் செயலையும் பாராட்டி வருகின்றனர்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap