சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் உடல் நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதுக்கப்பட்டுள்ளார். .
சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ்-க்கு 86 வயதாகிறது. அவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும் ஜித்தா நகரத்தில் இருக்கும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் அந்தாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக சவுதி மன்னர் சல்மானுக்கு, கடந்த 2020-ஆம் ஆண்டு பித்தப்பை அறுவை சிகிச்சையும் கடந்த மார்ச் மாதம் இதய பிரச்சனைக்கென சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.