UAE Tamil Web

தமிழகத்திலிருந்து வெளிநாடு செல்பவர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் – விபரம் உள்ளே..!

Long-manufacturing-timeline-hampers-annual-flu-vaccine-strain-selection-experts-say

கொரோனா காரணமாக பல நாடுகள் முன்னெச்சரிக்கை கருதி, தங்களது நாட்டிற்கு வரும் பயணிகள் அனைவரும் தடுப்பூசி எடுத்திருக்கவேண்டும் என அறிவித்துவருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரையில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் பரவலாக மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

கோவாக்சின் தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது டோஸிற்கான இடைவெளி 4 – 6 வாரங்கள் என இந்திய ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ளது. அதாவது முதல் டோஸ் கோவாக்சின் எடுத்துக்கொண்டவர்கள் 4 – 6 வாரங்கள் கழித்து இரண்டாவது டோசைப் பெற தகுதி பெறுவார்கள். அதேபோல கோவிஷீல்டுக்கு 12 – 16 வாரங்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் இரண்டாவது டோஸிற்காக நெடுநாள் காத்திருக்க வேண்டிய அபாயம் ஏற்பட்டது. இதனைச் சரிசெய்யும் நோக்கில் தமிழக அரசு சிறப்பு தடுப்பூசி முகாம்களை ஏற்படுத்தியிருக்கிறது.

கல்வி மற்றும் வேலைகளுக்காக வெளிநாடு செல்பவர்கள் இந்த தடுப்பூசி மையங்களில் 28 நாள் இடைவெளியில் இரண்டாவது டோசைப் பெறலாம். தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 75 சிறப்பு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் இந்தியா சார்பில் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்வோர் இந்த மையங்களுக்குச் சென்று 28 நாட்கள் இடைவெளியில் தங்களது இரண்டாவது டோசை பெற முடியும்.

தேவையுள்ளோர் கீழ்க்கண்ட நபர்களைத் தொடர்புகொள்ளவும்.

 

Long-manufacturing-timeline-hampers-annual-flu-vaccine-strain-selection-experts-say
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap