UAE Tamil Web

ஏர் இந்தியாவை 18 ஆயிரம் கோடிக்கு வாங்கியது டாட்டா குழுமம் – இந்திய அரசு அறிவிப்பு..!

Air-India

கடனில் தத்தளித்துக்கொண்டிருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை 18,000 கோடிக்கு டாட்டா நிறுவனம் வாங்கியிருப்பதாக இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே கடனில் திணறிக் கொண்டிருந்த ஏர் இந்தியா நிறுவனம் பல நாடுகள் கொரோனா காரணமாக பயணத் தடைகள் விதித்ததால் மேலும் வீழ்ச்சியைக் கண்டது. இதன் காரணமாக ஏர் இந்தியாவை விற்க அரசு முன்வந்தது.

இந்நிறுவனத்தை வாங்க விரும்பும் நிறுவனங்கள் ஏல விபரத்தை வெளியிட அரசு அவகாசம் அளித்திருந்தது. ஏர் இந்தியாவை வாங்க டாட்டா சன்ஸ் நிறுவனம் ஆர்வம் காட்டிவருவதாக பல்வறு தரப்பிலிருந்தும் சொல்லப்பட்டது.

அதை மெய்ப்பிக்கும் வகையில் ஏர் இந்தியாவை 18,000 கோடி ரூபாய்க்கு டாட்டா சன்ஸ் குழுமம் வாங்கியிருப்பதாக மத்திய அரசு செயலர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இதனால் 68 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டாட்டா வசம் செல்கிறது ஏர் இந்தியா.

சரிவிலிருந்து மீண்டு, மறுபடியும் ஏர் இந்தியா வெற்றி நடைபோடுமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Air-India
2 Shares
Share via
Copy link