சவுதி அரேபியாவின் ஜித்தாவில் உள்ள எண்ணெய் கிடங்கின் மீது ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இது பயங்கர தாக்குதல் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணைதளத்தில் வெளியாகி உள்ளது.
பெரிய எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான அரம்கோ பல நிலையங்களைக் கொண்டுள்ளது. அதன் சுத்திகரிப்பு நிலையங்களைக் குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
இது குறித்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ட்ரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் பல தாக்குதல்களை நடத்தினோம். ஜித்தாவில் அரம்கோ மற்றும் ரியாத்தில் முக்கிய நிறுவனங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி உள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன் ஜித்தா எண்ணெய் கிடங்கில் இதேபோன்ற தாக்குதலை ஹவதி கிளர்ச்சியாளர்கள் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.