37.7 C
Dubai
September 22, 2020
UAE Tamil Web

இந்தியாவிலிருந்து அமீரகம் பயணிப்போர் கவனத்திற்கு.. கட்டாய கோவிட் -19 நெகட்டிவ் PCR பரிசோதனை குறித்து ஏர் இந்தியா முக்கிய அறிவிப்பு

pcr

இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு பயணிக்கும் பயணிகளுக்காக, கோவிட் -19 RT-PCR டெஸ்ட் குறித்த முக்கிய தகவல் ஒன்றை ஏர் இந்தியா வெளியிட்டுள்ளது. அந்நிறுவனத்தின் சமீபத்திய வலைப்பதிவில், கட்டாய நெகட்டிவ் கோவிட் -19 PCR மருத்துவ சோதனையின் முடிவுகளை சமர்ப்பிப்பது குறித்து பயணிகளுக்கு சில அறிவுறுத்தல்கள் கூறப்பட்டுள்ளன.

அதன்படி இந்தியாவிலிருந்து அமீரகத்திற்கு விமான பயணம் மேற்கொள்வோர், கையால் எழுதப்பட்ட PCR சோதனை முடிவுகளை விமான நிலைய அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டாம். ஏனென்றால் அமீரகம் அல்லது இந்தியாவில் உள்ள சிவில் விமான போக்குவரத்து மற்றும் சுகாதார அதிகாரிகள், கைகளால் எழுதப்பட்ட பரிசோதனை முடிவுகளை ஏற்று கொள்ளமாட்டார்கள் என்று சுட்டிக்காட்டியுள்ளது.

* இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(Indian Council of Medical Research), பியூர் ஹெல்த்(Pure Health) அல்லது மைக்ரோ ஹெல்த் ( Micro Health) உள்ளிட்டவற்றின் அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களிலிருந்து எடுக்கப்பட்ட நெகட்டிவ் கோவிட் -19 பி.சி.ஆர் சோதனை முடிவுகளை மட்டுமே காட்ட வேண்டும்.

* அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தின் முறையான கையொப்பம் மற்றும் அசல் முத்திரையிடப்பட்ட லெட்டர்ஹெட்டில்(letterhead) வழங்கப்படும் சோதனை முடிவுகளையே பயணிகள் சமர்ப்பிக்க வேண்டும்.

Twitter Link | Archive Link

* சோதனை முடிவு திருத்தப்பட்டிருக்கவோ அல்லது கையால் எழுதப்பட்டிருக்கவோ கூடாது.

* அதே போல சோதனை முடிவுகளின் புகைப்பட நகல்கள்(photocopi) ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.

96 மணி நேரத்திற்கு முன் என்ற கால அளவு, பரிசோதனைக்காக மாதிரி சேகரிக்கப்பட்ட நேரத்திலிருந்து துவங்குகிறது என கூறியுள்ளது. மேலும் True NAT/CB-NAAT முறை ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும், ரியல் டைம் RT-PCR-ஆல் பகுப்பாய்வு செய்யப்பட்ட nasopharyngeal மற்றும் oropharyngeal ஸ்வாப் சோதனை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும் கூறியுள்ளது

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!