UAE Tamil Web

“இனி என்னை யார் திருமணம் செய்துகொள்வார்கள்?” – சமூக வலைத்தளத்தில் புகைப்படங்கள் வெளியானதால் அதிர்ச்சியடைந்த இளம்பெண்..!

SNAPCHAT

வளைகுடா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருடைய புகைப்படங்களை ஸ்னாப்சாட்டில்  வெளியிட்ட நபர் மீதான வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட வளைகுடா நாட்டைச் சேர்ந்த இளைஞர் 7,464 திர்ஹம்ஸ் தொகையை இழப்பீடாக பெண்ணிற்கு வழங்கவும் சட்ட கட்டணங்கள் மற்றும் செலவுகளை ஏற்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இளைஞர் செய்த காரியத்தால் தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் இது எனக்கு திருமணம் நடைபெறும் வாய்ப்பை குறைத்துவிட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண்மணி தெரிவித்துள்ளார்.

இருப்பினும் குற்றவாளியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “தனது கட்சிக்காரர் அவருடைய (பெண்ணுடைய) புகைப்படங்களை வெளியிட்டார் என்பதற்கோ, இதனால் அந்தப் பெண் பாதிக்கப்பட்டார் என்பதற்கோ ஆதாரமில்லை ஆகவே வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்” எனத் தெரிவித்தார்.

மேலும், சட்ட கட்டணங்கள் மற்றும் செலவுகளை அந்தப் பெண்ணே ஏற்கவேண்டும் எனவும் வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

இதனிடையே வழக்கு விசாரணையின்போது அந்தப் பெண் தன்னிடம் ஸ்னாப்சாட் பாஸ்வேர்டை கொடுத்ததாகவும் அதன்மூலம் புகைப்படங்களை வெளியிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் ஒப்புக்கொண்டார்.

சட்டத்திற்குப் புறம்பாக ஒருவரது கணக்கினைப் பயன்படுத்தியது மட்டுமல்லாமல் அவருடைய அந்தரங்க தகவல்களை வெளியிட்ட குற்றத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

SNAPCHAT
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap