UAE Tamil Web

தெருவில் வலம் வந்த சிங்கம் – இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

REG-LION_

சவூதி அரேபியாவின் கிழக்குப் பிராந்தியமான அல் கோபாரில் இன்று சிங்கம் ஒன்று தெருவில் சுற்றித் திரிந்திருக்கிறது.

இன்பச் சுற்றுலா சென்றவர்களைப் போல தெருவில் ஹாயாக நடந்து சென்ற சிங்கத்தினை பலரும் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட தற்போது அது வைரலாகியிருக்கிறது.

இதுகுறித்து வனத்துறை மேம்பாட்டு அமைச்சகத்திற்கு தகவல் கொடுக்கப்பட, வன விலங்கு நிபுணர்கள், கால்நடை மருத்துவர் அடங்கிய குழு அல் கோபாருக்கு விரைந்து வந்தனர்.

உடனடியாக மயக்க மருந்து ஊசியை செலுத்தி சிங்கத்தினை மயக்கமடைய வைத்த நிபுணர்கள், அதனை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டுசென்று விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

REG-LION_
0 Shares
Share via
Copy link