UAE Tamil Web

சவுதியில் இனி முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை.. அரசு அறிவிப்பு

கோவிட்-19 தொற்று நோய்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை சவுதி அரேபிய அரசு படிபடியாக நீக்கி வருகிறது. அதன் எதிரொலியாக சவுதி விதிக்கப்பட்டிருந்த ஒரு முக்கிய கட்டுப்பாட்டை விலக்கியுள்ளது அரசு.

சவுதி அரேபியாவிற்கு செல்லும் பயணிகள் இனி கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று சவுதி அறிவித்துள்ளது.

மசூதிகளில் சமூக இடைவெளியுடன் தொழுகை நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது இடைவெளியின்றி தொழுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சவுதி அரேபியாவில் வெளிப்பகுதியில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்றும் பொதுமக்கள் மசூதிகளிலும், உட்புறப் பகுதிகளிலும் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சவுதி உள்துறை அமைச்சகத்தின் இந்த அதிகாரப்பூர்வ கட்டுப்பாடுகளின் தளர்வுகள் மார்ச்  5 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap