UAE Tamil Web

புர்ஜ் கலீஃபா உள்ளிட்ட முக்கிய சுற்றுலாத் தளங்களின் நுழைவுக்கட்டணத்தில் 50% வரையில் தள்ளுபடி – இதைச் செய்யுங்கள் போதும்..!

burj kahlifa

அமீரகத்தில் கோடைக்காலம் துவங்கிவிட்டது. இந்நிலையில் இதனை வரவேற்கும் விதமாக துபாயின் முக்கிய சுற்றுலாத் தளங்களின் நுழைவுக் கட்டணத்தில் 50 சதவீதம் வரையில் தள்ளுபடியைப் பெற புதிய திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

துபாய் மால் பிக் டிக்கெட்டை வாங்கினால் துபாயின் முக்கிய சுற்றுலாத் தளங்களை தள்ளுபடிக் கட்டணத்தில் சுற்றிப்பார்க்கலாம். துபாய் மாலில் அமைந்துள்ள குறிப்பிட்ட POS பகுதிகளில் பிக் டிக்கெட்டை வாங்கலாம். மாலின் தரைத்தளத்தில் கோஸ்டா காபி நிலையத்திற்கு எதிரிலும் லெவல் 7 ல் உள்ள சினிமா எண்ட்ரன்ஸ் பகுதியிலும் இந்த டிக்கெட்களை நீங்கள் வாங்கலாம்.

இந்த டிக்கெட்டினை வைத்திருந்தால் கீழ்க்கண்ட இடங்களை தள்ளுபடிக் கட்டணத்தில் உங்களால் சுற்றிப்பார்க்க முடியும்.

  • புர்ஜ் கலீஃபாவின் உச்சிப்பகுதி
  • ரீல் சினிமாஸ்
  • துபாய் அக்வேரியம் மற்றும் நீருக்கடியில் அமைந்துள்ள மிருகக்காட்சிசாலை (Underwater Zoo)
  • துபாய் ஐஸ் ரிங்
  • கிட்ஸானியா மற்றும் VR பார்க்

140 வகையான உயிரினங்கள் மற்றும் 400 சுறா, திருக்கைகளை கொண்டுள்ள துபாய் துபாய் அக்வேரியம் மற்றும் நீருக்கடியில் அமைந்துள்ள மிருகக்காட்சிசாலையை இப்படியான தள்ளுபடி கட்டணத்தில் சுற்றிப்பார்க்க சரியான நேரம் இது.

அதேபோல புர்ஜ் கலீஃபா கட்டிடத்தின் 124 மற்றும் 125 வது மாடியில் இருந்து துபாயைப் பார்வையிடும் த்ரில்லான அனுபவமும் உங்களுக்கு இதன் மூலமாகக் கிடைக்கும்.

இந்தத் திட்டம் ஜூலை 30, 2021 ஆம் தேதி வரையில் நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.